India Languages, asked by StarTbia, 1 year ago

2. கமலநாதன் எவ்வாறு மனம் திருந்தினான் என்பதனை விளக்குக.
நெடுவினாக்கள் / Long answer questions
Chapter9 மெல்ல மெல்ல மற! -
Page Number 47 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
1

மரணத்தின் வாயில் புகைப்பழக்கம்:


ஒருநாள் கமலநாதன், தன் நண்பன் இராமலிங்கம், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாய் அறிந்து, அவனைப் பார்க்கச் சென்றான். இராமலிங்கம் மனைவி சியாமளா, அவர் இடைவிடாமல் புகைப்பார் என்றும், அதனால் அவர் இதயத்தில் புற்றுநோய்க் கட்டி ஏற்பட்டுவிட்டது என்றும் கூறினாள். 


மேலும், மருத்துவர் ஆரம்ப நிலையில் வந்திருந்தால் அவனைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும், புற்றுநோய்க் கட்டியை அறுத்து எடுத்தாலும் ஆறு, ஏழு வருடங்கள்தாம் வாழ்வார் என்றும் கூறிவிட்டார். அதைக்கேட்டு கமலநாதன் முகத்தில் முதன்முதலாக பயத்தின் சாயல் நிழலாடியது.


கைம்மைக்கோலம் ஏற்படுத்திய கலக்கம்:


கமலநாதன் நண்பன் மனைவியின் கைம்மைக் கோலத்தை கண்டு அதிர்ச்சியுற்றான். தன் மனைவிக்கும் அந்நிலை ஏற்படுமோ என்னும் பயம் ஆவன் மனதில் சூழ்ந்தது.


படிப்படியாய் பழக்கத்தை மாற்று:


தனக்கு சிகரெட் குடிக்க வேண்டும் என்று தோன்றினால் தான் தண்ணீரைக் குடிப்பதாயும், அதை திசை திருப்பக் குழந்தைகளுக்கு பாடம் கற்றுத் தருவதாயும், அவர்களுடன் விளையாடுவதாயும், புத்தகம் படிப்பதையும் கமலநாதன் கூறினான்.


இவ்வாறு சிகரெட் நினைவிலிருந்து மாற, சிகரெட்டுப் பிடிகளிலிருந்து மெல்ல மெல்ல விலக முயல்வதாய் கமலநாதன் கூறினான். இவ்வாறு கமலநாதன் மனம் திருந்தினான்.  





Similar questions