2. கண்ணகி குறித்து வாயிற்காவலன் கூறியவற்றை எழுதுக?
சிறுவினாக்கள் / Short answer questions
Chapter6 சிலப்பதிகாரம்-
Page Number 38 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
2
விடை :
கண்ணகி குறித்து வாயிற்காவலன் கூறியது:
நம் வாயிலில் பெண்ணொருத்தி வந்து நிற்கிறாள். அவள், மகிஷாசுரன் தலையாகிய பீடத்தில் ஏறி நின்றவளும், பெரிய கையில் வெற்றி பொருந்திய வேலினைத் தாங்கியவளுமாகிய கொற்றவையும் அல்லள்; ஏழு கன்னியருள் ஆறு பேருக்கு இளையவளாகிய பிடாரியும் அல்லள்; சிவபெருமானை நடனமாடச் செய்த பத்திரகாளியும் அல்லள்; அச்சமுடைய காட்டைத் தனக்கு இருப்பிடமாய்க் கொண்ட காளியும் அல்லள்; தாருகன் என்ற அசுரனுடைய அகன்ற மார்பைப் பிளந்த துர்க்கையோ எனில், அவளும் அல்லள்; அவள் தீராத பகையும் சினமும் கொண்டவளாய் உள்ளாள்;
வேலைப்பாடமைந்த ஒற்றைச் சிலம்பைக் கையில் ஏந்தியுள்ளாள்; கணவனை இழந்தவள் என்று கண்ணகி குறித்து வாயிற்காவலன் கூறினான்.
Similar questions
English,
8 months ago
Math,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Biology,
1 year ago