3. சிலப்பதிகாரம் காட்டும் சோழநாட்டு மன்னர்களின் சிறப்புக்கள் யாவை?
சிறுவினாக்கள் / Short answer questions
Chapter6 சிலப்பதிகாரம்-
Page Number 38 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
2
விடை :
சிலப்பதிகாரம் காட்டும் சோழநாட்டு மன்னர்களின் சிறப்புக்கள்:
சோழநாட்டு மன்னர்களுள் ஒருவன் சிபி சக்கரவர்த்தி. அவன் எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் ஓம்புபவன். அவன் தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவிற்கு ஈடாய்த் தன் உடல் தசைகளை அரிந்து துலாத்தட்டில் வைத்தான்; எவ்வளவு வைத்தும் புறாவின் எடைக்கு ஈடாகாமையால் தானே துலாத்தட்டில் ஏறி நின்றான்.
மற்றொரு சோழ மன்னன், மனுநீதிச்சோழன். அவன் மகன் சென்ற தேர்ச் சக்கரத்தில் சிக்கி ஒரு கன்று மாண்டது. அதனைப் பெற்ற தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை அடித்து அரசவையில் முறையிட்டது. அதனால் மனம் பதறிய மனுநீதிச்சோழன், தன் ஒரே மகன் மீது தானே தேரைச் செலுத்திக் கொன்று நீதி வழங்கினான்.
Similar questions
English,
8 months ago
English,
8 months ago
Social Sciences,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Biology,
1 year ago
Biology,
1 year ago