India Languages, asked by Shakti4940, 11 months ago

3. குழியுடலிகள் ஈரடுக்கு உயிரிகள்என்றழைக்கப்படுவது ஏன்?

Answers

Answered by steffiaspinno
1

குழியுடலிகள்  ஈரடுக்கு உயிரிகள் என்றழைக்கப்படுவத‌‌ன் காரண‌ம்:

  • அனைத்து சீலென்டிரேட்டுகள் அல்லது குழியுடலிகளும் நீரில் வாழ்வன.  இவைகள் பெரும்பாலும் கடலில் வாழும் உயிரினங்களாகும்.
  • உடல் ஆரச்சமச்சீருடையது. உடற்சுவரில் புற அடுக்கு மற்றும் அக அடுக்கு என இரு அடுக்குகள் உண்டு.
  • எனவே இது -ஈரடுக்கு உயிரிகள் என அழைக்கப்படுகின்றன.
  • இவ்வடுக்குகளுக்கிடையே  காணப்படும் அடர் கூழ்மம் போன்ற பொருள் மீசோகிளியா (செல்களால் ஆக்கப்படாத) எனப்படும்.
  • இவற்றில் பல்லுருவ அமைப்பைக் கொண்டுள்ள பல குழியுடலிகள் காணப்படுகின்றன. அவற்றில் பாலிப் மற்றும் மெடுசா எனும் இரு உருவ அமைப்புகள் பொதுவாக காணப்படுகின்றன.
  • இவற்றில் கொட்டும் செல்கள் அல்லது நிமட்டோசிஸ்ட்கள்(நிடோபிளாஸ்ட்கள் – (Cnidoblasts)  புறப்படையில் அமைந்துள்ளன.
  • நிடோசில் (Cnidocil) எனும் கொடுக்கும் பெற்றிருப்பதனாலேயே  இவை நிடோரியா என்றும் அழைக்கப்படுகிறது.
Similar questions