India Languages, asked by StarTbia, 1 year ago

3. சான்றோர் நட்புக்கு உவமையாகக் கூறப்படுவன யாவை?
சிறுவினாக்கள் / Short answer questions
Chapter14 புறநானூறு-
Page Number 89 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by ajeetayadava44p8m08b
2
Hey Mate,

Post In That Language,In Which We Can Understand.
Post In English Mostly..
So We Can Help You.
Answered by gayathrikrish80
1

விடை:


சான்றோர் ஒருவருக்கொருவர் தொலைவில் இருந்தாலும், தக்க சமயத்தில் ஒருங்கு சேர்வர். இதற்கு, மண்ணுக்கடியில் உள்ள பொன்னும், ஆழ்கடலில் கிட்டும் முத்தும் பவளமும், மலையில் கிட்டும் மணியும் ஒன்றுக்கொன்று நெடுந்தொலைவில் இருந்தாலும், அவை ஒருங்கு சேர்ந்து மதிப்பு மிக்க அணிகலனாக அமைவது உவமையாக கூறப்படுகிறது.


விளக்கம்:


பொன்னும் பவளமும் முத்தும் மணியும் நிலைத்த பெருமலையில் பிறக்கும் மாணிக்கமும் தோன்றும் இடங்களால் ஒன்றுக்கொன்று தொலைவில் இருப்பினும், மாலையாகக் கோத்து மதிப்பு மிக்க அணிகலனாக அமைக்கும் போது, தம்முள் ஒருங்கு சேரும். அதுபோல சான்றோர் என்றும் சான்றோர் பக்கமே சேர்வர். சான்றாண்மை இல்லாதவர் தீயவர் பக்கமே சேர்வர்.


இந்த பாடலின் ஆசிரியர் கண்ணகனார் கோப்பெருஞ்சோழனின் அவைக்களப் புலவர்களுள் ஒருவர். கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் நீத்த பொழுது, அவருடன் இருந்த இந்த புலவர், வருந்தி இந்த பாடலை பாடியுள்ளதாக அறியப்படுகிறது.

Similar questions