டவுன் நோய்க் கூட்டு அறிகுறி என்பது 45 குரோமோசோம்கள் உள்ள மரபியல் நிலை
Answers
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
டவுன் நோய்க் கூட்டு அறிகுறி
- 1866 ஆம் ஆண்டு லாங்க்டன் டவுன் என்ற மருத்துவரால் டவுன் நோய்க் கூட்டு அறிகுறி முதன் முதலில் அடையாளம் காணப்பட்டது.
- டவுன் நோய்க் கூட்டு அறிகுறி என்பது 21வது குரோமோசோமில் ஒரு நகல் குரோமோசோம் (21- வது டிரைசோம்) உள்ள நிலை ஆகும்.
- அதாவது டவுன் நோய்க் கூட்டு அறிகுறி என்பது 47 குரோமோசோம்கள் உள்ள மரபியல் நிலை ஆகும்.
- டவுன் நோய்க் கூட்டு அறிகுறியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் காணப்படும் அறிகுறிகள் மன வளர்ச்சிக் குறைபாடு, தாமதமான வளர்ச்சி, நடத்தை சார்ந்த பிரச்சனைகள், பலவீனமான தசை அமைப்பு, பார்வை மற்றும் கேட்டல் குறைபாடு முதலியன ஆகும்.
Similar questions