India Languages, asked by Brahmmi596, 11 months ago

6. மின்னோட்டத்தின் வெப்ப விளைவு________ என அழைக்கப்படும்.அ) ஜூல் வெப்பமேறல்ஆ) கூலூம் வெப்பமேறல்இ) மின்னழுத்த வெப்பமேறல்ஈ) ஆம்பியர் வெப்பமேறல்

Answers

Answered by Anonymous
0

Answer:

hey mate

Explanation:

ஜூல் வெப்பமாக்குதல் (Joule heating) என்பது ஒரு கடத்தி மூலம் மின்சாரம் பாயும்போது வெப்பம் உண்டாகும் முறையாகும். இது ஓமிக் வெப்பமாக்குதல் மற்றும் மின் தடை வெப்பமாக்குதல் என்றும் அழைக்கப்படுகிறது. முதலில் இதனை ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல் 1841ம் ஆண்டு ஆய்வு செய்தார். ஜூல் ஒரு நீண்ட கம்பியை குறிப்பிட்ட நிறையுள்ள தண்ணீரில் மூழ்கவைத்து, அதன் வழியே குறிப்பிட்ட மின்னோட்டத்தை 30 நிமிடங்கள் செலுத்தி, அதன் வெப்பநிலை உயர்வை கணக்கிட்டார். மின்சாரம் மற்றும் கம்பியின் நீளத்தை மாற்றியபொழுது உருவாக்கப்பட்ட வெப்பத்தின் அளவானது மின்னோட்டத்தின் இரு மடியையும் கம்பியின் மின் தடையையும் பெருக்கி வரும் அளவிற்கு நேர் விகிதத்தில் இருப்பதாக ஊகித்தார்.

{\displaystyle Q\propto I^{2}\cdot R} {\displaystyle Q\propto I^{2}\cdot R}

இந்த உறவு ஜூலின் முதல் விதி என அழைக்கப்படுகிறது. ஆற்றலின் SI அலகு ஜூல் என பெயரிடப்பட்டு. J என்ற குறியீடு கொடுக்கப்பட்டது. பொதுவாக அறியப்பட்ட ஆற்றலின் அலகு வாட் ஒரு ஜூல்/வினாடிக்கு சமமாகும்.

ஜூல் வெப்பமாக்குதல் என்பது மின்சாரத்தை உருவாக்கும் நகரும் துகள்களுக்கும் (பொதுவாக எலெக்ட்ரான்கள்), கடத்திகளில் உள்ள அனு அயனிகளுக்கு இடையே ஏற்படும் இடைவினை என தற்போது அறியப்படுகிறது. ஒரு மின்சுற்றில் உள்ள மின்னுட்டம் செய்யப்பட்ட துகள்கள் மின்புலத்தினால் விரைவு படுத்தப்பட்டு, அதன் இயக்கசக்தியின்ஒரு பகுதியை அயநிகளுடன் மோதும் பொழுது அயநிகளுக்கு கொடுக்கிறது. அயனிகளின் இயக்க அல்லது அதிர்வு சக்தி அதிகம் ஆகும் பொழுது அது வெப்பமாக வெளிப்பட்டு கடத்தியின் வெப்பநிலை உயர்கிறது. ஆகவே ஆற்றலானது மின்சார விநியோகத்திலிருந்து கடத்திக்கும் வெப்ப தொடர்பில் உள்ள மற்ற பொருட்களுக்கும் மாற்றப்படுகிறது.

ஜூல் வெப்பமாக்குதல் ஓம் விதியுடன் தொடர்பின் காரணமாக ஓம் வெப்பமாக்குதல் அல்லது தடை வெப்பமாக்குதல் என அழைக்கப்படுகிறது. இதுவே மின்சார வெப்பமாக்குதல் பற்றிய அனேக நடைமுறை பயன்பாடுகளுக்கு அடிப்படை ஆகிறது. எனினும், வெப்பமூட்டம் என்பது வேண்டப்படாத உப பொருளாக இருக்கும் பயன்பாடுகளில் (உ-ம் மின்மாற்றிகளில் சுமை இழப்பு), ஆற்றல் மாற்று தடை நஷ்டம் என அழைக்கப்படுகிறது. மின்சாரம் அனுப்பும் அமைப்புகளில் அதிக மின் அழுதத்தில் குறைந்த மீன்னோட்டம் செலுத்தி இழப்பீடு குறைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு வீட்டில் உபயோகப்படுத்தப்படும் ரிங் சர்கியுட்களில்(ring circuit) மின் திறன்னானது குறைந்த மின் ஓட்டத்தில் வெளி இடங்களுக்கு செலுத்தப்பட்டு கடத்திகளில் ஜூல் வெப்பமக்குதல் குறைக்கப்படுகிறது. மீக்கடத்துத்திறன் உடைய பொருட்களை உபயோகித்து ஜூல் வெப்பமக்குதளை தவிர்க்க முடியும்.

ஜான்சன்-நைகுயிஸ்ட் சத்தத்திற்கும்(Johnson–Nyquist noise) ஜுல் வேப்பமக்குதலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனை ஃப்ளக்குடுவேஷன்-டிசிப்பேஷன் தேற்றம்(fluctuation-dissipation theorem) விவரிக்கிறது.

MARK ME AS BRAINLIST...

HOPE IT HELP ❤️✌️

Answered by steffiaspinno
1

மின்னோட்டத்தின் வெப்ப விளைவு ஜூல் வெப்பமேறல் என அழைக்கப்படும்:

  • ஒரு மின் சுற்றில் மின்னோட்டம் பாயும் போது அதிக வெப்பவிளைவு, காந்தவிளைவு, வேதி விளைவுகளை ஏற்படுத்துகிறது.
  • வெப்ப ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படும் விளைவு ஜூலின் வெப்ப விளைவு அல்லது ஜூல் வெப்பமேறல் எனப்படும்.  
  • ஜூல் என்ற அறிவியல் அறிஞர் விரிவாக ஆய்வு செய்தார்.
  • மின்சார இஸ்திரி பெட்டிகள், மின் அடுப்பு, மின் நீர் சூடேற்றி, ஆகிய கருவிகளில்இல்லிளைவு பயன்படுகிறது.  
  • மின்வெப்ப சாதனங்களின் அடிப்படையாக இவ்விளைவு விளங்குகிறது.
  • மின்முலாம் பூசும் பொழுது மின்னாற்றல் வேதி ஆற்றலாக மாற்றப்படுகிறது.
  • சில கரைசல்கள் வழியே மின்னோட்டத்தை செலுத்தி அவற்றை பிரிப்பதை மின்னாற்பகுப்பு என்கிறோம்.
  • மின்னோட்டம் பாயும் திரவம் மின்பகு திரவம் என்கிறோம்.
Similar questions