India Languages, asked by StarTbia, 1 year ago

6. திருவாசகத்திற்கு உருகார் _____________ உருகார்.
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
Chapter1 வாழ்த்து-
Page Number 2 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்


விளக்கம்:


இறையன்பாகிய பத்தியைப் பெருக்குவதில் ஈடும் எடுப்பும் இல்லாதது, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம். "திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்னும் பழமொழியே திருவாசகத்தின் பத்திச் சிறப்பைத் தெளிவுற விளக்கும். சைவ சமய திருமுறைகளில்  எட்டாந் திருமுறையாகிய  திருவாசகத்திற்கு என்றுமே ஒரு தனிச்சிறப்பு உண்டு.


சிவபெருமான் அந்தணர் உருவங்கொண்டு, மணிவாசகரை அருகிலிருத்தி அவர் பாடிய திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் சொல்லியருள வேண்டினார்.  அதை அந்தணர் உருவில் இருந்த இறைவனே தம் திருக்கரத்தால் எழுதி முடித்தார் என வரலாறு கூறுகிறது.
Similar questions