உறுதிப்படுத்துதல் (A): மூன்றாம் நிலைத்
தொழிலில், பொருள்கள் நேரடியாக உற்பத்தி
செய்யப்படாமல் உற்பத்தி செய்வதற்கான
செயல்முறைகளில் உறுதுணையாக
உள்ளது.
காரணம் (R): மூன்றாம் நிலைத்தொழிலில்
ஈடுபடும் மக்கள் முழுமையாக சுற்றுச்
சூழலுக்குச் சாதகமாகச் செயல்படுகிறார்கள்.
(அ) A மற்றும் R இரண்டும் தவறு.
(ஆ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால்,
Aவானது Rக்கு விளக்கம் தரவில்லை.
(இ) A சரி. ஆனால், R தவறு.
(ஈ) A மற்றும் R இரண்டும் சரி. Aவானது
Rக்கு சரியான விளக்கம் தருகிறது.
Answers
Answered by
0
உறுதிப்படுத்துதல் (A) சரி. ஆனால் காரணம் (R) தவறானது .
பொருளாதார நடவடிக்கைகள்
- பொருள்களை ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பகிர்ந்து கொள்வது, உற்பத்தி செய்வது, சேவை செய்வது ஆகியவை பொருளாதார நடவடிக்கைகள் ஆகும்.
முதல் நிலை தொழில்
- மூலப் பொருட்களை பூமியிலிருந்து எடுத்து பயன்படுத்தும் தொழில் முதல்நிலைத் தொழில் ஆகும்.
இரண்டாம்நிலைத் தொழில்
- மூலப்பொருட்களை முடிவுற்ற பொருளாக மாற்றுவது இரண்டாம் நிலைத் தொழில்கள் ஆகும்.
மூன்றாம் நிலைத் தொழில்
- பொருள்கள் உற்பத்தி செய்யப்படாமல் உற்பத்தி செய்தலுக்கு துணைபுரிவது மூ ன்றாம் நிலைத் தொழில் ஆகும்,
(எ.கா)
- போக்குவரத்து, தகவல் தொடர்பு, வங்கிகள் போன்றவை பொருள்களை எடுத்துச் செல்வதற்கு அதாவது உற்பத்தி செய்தலுக்கு துணைபுரிகின்றன.
- எனவே மூன்றாம் நிலைத் தொழிலில் ஈடுபடும் மக்கள் சுற்றுச் சூழலுக்கு சாதகமாக செயல்படுகிறார்கள் என்பது தவறானது.
Similar questions
Science,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Math,
11 months ago
Business Studies,
1 year ago
English,
1 year ago