உறுதிப்படுத்துதல் (A): படுக்கை அடுக்கில்
உள்ள ஓசோன் படலத்தை பாதுகாப்பு
கேடயம் என்கிறோம்.
காரணம் (R): புற ஊதாக்கதிர் வீச்சு புவியை
அடையாமல் தடுக்கிறது.
(அ) Aவும் Rம் சரி மற்றும் A என்பது Rன்
சரியான விளக்கம்.
(ஆ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால்,
Aவானது Rன் சரியான விளக்கமல்ல.
(இ) A தவறு. ஆனால், R சரி.
(ஈ) A மற்றும் R இரண்டும் தவறு.
Answers
Answered by
0
'A' வும் 'R' ம் சரி மற்றும் A என்பது R ன் சரியான விளக்கம் .
- குளோரோ புளோரோ கார்பன், ஹைட்ரோ புளோரோ கார்பன், மித்தைல் பிரோமைட் ஆகியவை ஓசோன் படலத்தை சிதைவுறச் செய்கின்றன.
- ஓசோன் சிதைவுறுவதால் புற ஊதாக் கதிர்கள் புவிப்பரப்பை வந்தடைகின்றன.
- இதனால் புவி வெப்பமடைவதோடு மக்களுக்கு தோல் நோய், பார்வைக் குறைபாடு போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன.
- ஓசோன் மூன்று ஆக்ஸிசன் அணுக்களால் ஆன ஒரு நச்சு வாயு ஆகும்.
- சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் அதிக தீங்கு விளைவிப்பதாகும்.
- இந்த ஆபத்து விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களை ஓசோன் எடுத்துக் கொள்வதோடு புவியை வந்தடையாமல் பாதுகாக்கிறது.
- எனவே ஓசோன் உயிரினங்களைப் பாதுகாக்கும் கேடயம் என்கிறோம்.
- ஆகவே கூற்று சரி காரணம் அதற்கான சரியான விளக்கம் ஆகும்.
Similar questions
History,
5 months ago
Computer Science,
5 months ago
Math,
11 months ago
India Languages,
11 months ago
Business Studies,
1 year ago
English,
1 year ago