கூற்று (A): ஒரு நிலவரைபடத்தில் உள்ள
வரைபடக் குறிப்புகள் வரைபடத்தில் உள்ள
செய்திகளைப் புரிந்துகொள்ளப் பயன்படாது.
காரணம் (R): இது பொதுவாக
நிலவரைபடத்தின் அடிப்பகுதியில் இடது
அல்லது வலது புற ஓரத்தில் காணப்படும்.
அ. A தவறு R சரி
ஆ. A மற்றும் R இரண்டும் சரி ஆனால்
Rஆனது Aவிற்கு சரியான விளக்கமல்ல
இ. A சரி ஆனால் R தவறு
ஈ. A மற்றும் R இரண்டும் சரி
Answers
Answered by
0
Answer:
Pls post the question in Hindi or English
Answered by
0
கூற்று ''A ''தவறு ஆனால் ''R'' காரணம் சரி:
- நிலவரைபடம் என்பது உலகினை முழுமையாகவோ அல்லது பாதியாகவோ வரையப்படுவதாகும்.
- இதில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் மற்றும் நிறங்கள் மூலமாக பல்வேறு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
- நிலவரைபடம் என்பது நிலத்தினை மேலிருந்து பார்ப்பதுபோல் வரையப்படுபவை ஆகும்.
- அளவை மற்றும் திசைகள் கொண்டு நிலவரைபடங்கள் வரையப்படுகின்றன.
- தலைப்பு, அளவை, திசை, வலைப்பின்னல் அமைப்பு, கோட்டுச்சட்டம் , நிலவரைபடக்குறிப்பு, முறைக்குறியீடுகள் ஆகியவை நிலவரைபடத்தின் கூறுகள் ஆகும்.
- நிலவரைபடத்தில் உள்ள வரைபடக் குறிப்புகள் வரைபடத்தில் உள்ள செய்திகளை புரிந்து கொள்ளப் பயன்படுகிறது .
- நிலவரைபடக்குறிப்பு என்பது பொதுவாக நிலவரைபடத்தின் கீழே, இடது அல்லது வலது மூலையில் குறிக்கப்பட்டிருக்கும்.
- ஆகவே கூற்று தவறாகும்.
Similar questions