India Languages, asked by anathapa629, 11 months ago

உயிருள்ள மெல்லிய சுவருடைய பலகோணவடிவ செல்களை கொண்டுள்ள திசுa. பாரன்கைமா b. கோளன்கைமாc. ஸ்கிளிரைன்கைமாd. மேலே கூறிய எதுவும் இல்லை

Answers

Answered by 18shreya2004mehta
0

Answer:

இவை உயிருள்ள செல் ஆகும் . இவற்றின் வேலை சேமிப்பு மற்றும் ஒளிசேர்க்கைக்கு உதவுதல் . இலைகளில் சைலம் மற்றும் புளோயம் செல்கள் மட்டும் இல்லாமல் முக்கியமாக பரன்கைமா செல்களும் காணப்படுகிறது . இலைகளின் மேல்புறத்தோலில் உள்ள பரன்கைமா செல்கள் ஒளி ஊடுருவும் மற்றும் வாயு பரிமாற்றம் செய்யும் தனி சிறப்புடையது ஆகும் .பரன்கைமா செல்கள் மெல்லிய ஊடுருவும் தன்மையுள்ள முதன்மை சுவரை கொண்டுள்ளது . இது இரு செல்களுக்கு இடையே மூலக்கூறுகள் நகர்வதை அனுமதிக்கிறது . இந்த செல்களில் உள்ள சைட்டோபிளாசம் பல உயிர் வேதியல் நிகழ்வுகள் நடைபெற காரணமாக உள்ளது .பரன்கைமா செல்கள் பல பசுங்கணிகங்க்களை கொண்டுள்ளது . இவை முக்கியமாக ஒளிசேர்க்கையில் ஈடுபடுகின்றன . எனவே இவைகள் குளோரென்கைமா செல்கள் எனப்படுகிறது . உருளைக்கிழங்கு , பயறுவகை தாவரங்களின் வித்திலைகளில் பரன்கைமா செல்கள் சேமிக்கும் செயலை செய்கிறது

Answered by steffiaspinno
1

உயிருள்ள மெல்லிய சுவருடைய பலகோணவடிவ செல்களை கொண்டுள்ள திசு - பாரன்கைமா

பாரன்கைமா

  • பார‌‌ன்கைமா உ‌‌யிரு‌ள்ள செ‌ல்களா‌ல் ஆன எ‌ளிய ‌நிலை‌த்த ‌திசு ஆகு‌ம்.
  • இவைக‌ள் சம அளவுடைய, மெ‌ல்‌லிய செ‌ல் சுவ‌ர் உடைய, மு‌ட்டை வடிவ அ‌ல்லது பலகோண அமை‌ப்புடைய செ‌ல் இடைவெ‌ளிகளை உடைய ‌திசுவாகு‌ம்.

கோலன்கைமா

  • கோல‌ன்கைமா பு‌ற‌த்‌தோலு‌க்கு ‌கீழே காண‌ப்படு‌ம் உ‌யிரு‌ள்ள செ‌ல்  ‌திசுவாகு‌ம்.
  • இவை ‌சீர‌ற்ற தடி‌த்த ‌லி‌க்‌னி‌ன் இ‌ல்லாத செ‌ல்சுவ‌ர் உடைய செ‌ல்களா‌ல் ஆனது.  

ஸ்கி‌ளீரைன்கைமா

  • ஸ்கி‌ளீரைன்கைமா ‌லி‌க்‌னினா‌ல் ஆன த‌டித்த செ‌ல்சுவரை உடையது. ‌‌
  • ஸ்‌கி‌ளிரை‌ன்கைமா ‌திசுவானது மு‌‌தி‌ர்‌ந்த ‌நிலை‌யி‌ல் புரோ‌ட்டோபிளாஸ‌ம் அ‌ற்று காண‌ப்படு‌ம். இவை நா‌ர்க‌ள் ம‌ற்று‌ம் ‌ஸ்‌கி‌‌ளீரைடுக‌ள் என இரு வகை‌ப்படு‌ம்.
  • எனவே உயிருள்ள மெல்லிய சுவருடைய பலகோண வடிவ செல்களை கொண்டுள்ள திசு பாரன்கைமா ஆகு‌ம்.
Similar questions