B செல் மற்றும் T செல் மனித உடலில் எங்கு
உற்பத்தி செய்யப்படுகிறது. அது மற்ற
செல்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது.
ஏதேனும் இரண்டு வேறுபாடுகளைக்
குறிப்பிடுக.
Answers
Answered by
0
B செல் மற்றும் T செல்
- இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களில் உள்ள செல்களில் 20 முதல் 30 % வரை லிம்போசைட்டுகள் உள்ளன.
- லிம்போசைட்டுகளில் உட்கரு மற்றும் சைட்டோபிளாசம் மட்டும் உள்ளது.
- B மற்றும் T என இரண்டு வகை லிம்போசைட்டுகள் உள்ளன.
- இவை இரண்டும் எலும்பு மஜ்ஜையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
- B செல்கள் எலும்பு மஜ்ஜையில் முதிர்ச்சி அடைந்து B லிம்போசைட்டுகளாக மாறி நிணநீர் முடிச்சு மற்றும் மண்ணீரலை அடைகின்றன.
- T செல்கள் எலும்பு மஜ்ஜையிலிருந்து வெளியேறி தைமஸில் முதிர்ச்சி அடைந்து T-லிம்போசைட்டுகளாக மாறி நிணநீர் முடிச்சு மற்றும் மண்ணீரலை அடைகின்றன.
வேறுபாடுகள்
- இவை இரண்டின் பெரும்பகுதி உட்கருவாகவும், மற்ற பகுதிகளில் சிறிய சைட்டோபிளாசம் மட்டுமே இருக்கும்.
- இவை இரண்டும் நோய் தடைக்காப்பியலில் ஈடுபடுகின்றன.
- இவை இரண்டும் முதிர்ச்சி அடைந்த பின்பு அந்த இடத்தினை விட்டு வேறு இடத்திற்கு செல்கிறது.
Similar questions