சந்தமு_ (ற/ர) வ_ந்ததனை (ரை/றை) எம்ம_ங்கும் (ரு/று) தங்க_டார் (ன்/ண்)
உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word
பெரியபுராணம்
Answers
Answered by
0
விடை:
சந்தமுற வரைந்ததனை எம்மருங்கும் தாங்கண்டார்
விளக்கம்:
இப்பாடல் திங்களூரை வந்தடைந்த திருநாவுக்கரசர் தண்ணீர்ப் பந்தலில் தம் பெயர் இருக்கக் கண்டு வியப்புற்றதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.
அப்பூதி அடிகளார் அமைத்த தண்ணீர்ப்பந்தலைக் கண்டார், நாவுக்கரசர். தென்றல் தவழும் குளிர்ச்சியான அதன் சூழலையும், அங்கு வழங்கப்படும் அமுதம் போன்ற தண்ணீரையும் கண்டு வியந்தார். அவ்வியப்புடன் அதைச் சுற்றிப் பார்த்தார்; அதன் எல்லாப் பக்கங்களிலும் 'திருநாவுக்கரசு தண்ணீர்ப்பந்தல்’ என்று தம் பெயர் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு பெருவியப்படைந்தார். அவர் அப்பூதியடிகளிடம், "சிவபெருமான் அடியார்களுக்காகத் தாங்கள் அமைத்த தண்ணீர்ப்பந்தலில் தங்கள் பெயரை எழுதாமல் வேறொருவர் பெயரை எழுதக் காரணம் என்ன?” என்று கேட்டார்.
Similar questions
Math,
8 months ago
English,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Hindi,
1 year ago