தூய நெட்டைப் பட்டாணிச் செடியானது தூய
குட்டைப் பட்டாணிச் செடியுடன் கலப்பினம்
செய்யப்பட்டது. இதன் மூலம் கிடைத்த F1 ( முதல்
சந்ததி) தாவரம் கலப்பினம் செய்யப்பட்டு F2
(இரண்டாம் சந்ததி)தாவரங்களை
உருவாக்கியது.
அ. F1 தாவரங்கள் எவற்றை ஒத்து இருந்தன?
ஆ. F2 சந்ததியில் தோன்றிய நெட்டை மற்றும்
குட்டைத் தாவரங்களின் விகிதம் என்ன?
இ. எவ்வகைத் தாவரம் F1 மறைக்கப்பட்டு F2
சந்ததியில் மீண்டும் உருவானது?
Answers
Answered by
0
முதல் சந்ததி (F1) பெற்றோர்
- முதல் சந்ததியில் தோன்றும் தாவரங்கள் அனைத்தும் நெட்டை பண்பினை உடைய ஒரு பண்பு கலப்பு உயிரிகள் ஆகும்.
இரண்டாம் சந்ததி (தலைமுறை) F2
- ஒரு பண்பு கலப்புயிரியான நெட்டைத் தாவரங்களை தன் மகரந்தச் சேர்க்கை ஆய்விற்கு உட்படுத்தும் போது 3 : 1 என்ற விகிதத்தில் நெட்டை மற்றும் குட்டைத் தாவரங்கள் உருவாகின.
- புறத்தோற்ற விகிதம் 3 : 1 ஆகும்.
- F2 சந்ததியில் கலப்பற்ற நெட்டை (TT–1), கலப்பின நெட்டை (Tt–2), கலப்பற்ற குட்டை (tt–1) முதலிய மூன்று விதமான தாவரங்கள் தோன்றின.
- ஒரு பண்பு கலப்பின் ஜீனாக்க விகிதம் 1:2:1 ஆகும்.
குட்டைத் தாவரங்கள்
- குட்டைத் தாவரங்கள் F1ல் மறைக்கப்பட்டு F2 சந்ததியில் தோன்றியது.
Similar questions
Physics,
5 months ago
English,
5 months ago
Science,
5 months ago
Environmental Sciences,
10 months ago
India Languages,
10 months ago
Science,
1 year ago
English,
1 year ago
English,
1 year ago