கீழ்வருவனவற்றுள் எது ஓட்ட (Flow)
கருத்துரு?
அ. சட்டைகளின் எண்ணிக்கை
ஆ. மொத்த சொத்து
இ. மாத வருமானம்
ஈ. பண அளிப்பு
Answers
Answered by
0
மாத வருமானம்
- மாத வருமானம் ஆனது ஓட்ட (Flow) கருத்துரு ஆகும்.
ஓட்ட (Flow) மாறிலி
- பேரியல் பொருளாதாரத்தில் உள்ள பொருளாதார ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் மாறிலிகளை இருப்பு மாறிலி மற்றும் ஓடும் மாறிலி என இரு வகையாக பிரிக்கலாம்.
- இருப்பு மாறிலி மற்றும் ஓடும் மாறிலி ஆகிய இரு மாறிலிகளும் காலத்தினை அடிப்படையாக கொண்டு அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்பவை ஆகும்.
- ஒரு குறிப்பிட்ட காலகட்ட அளவில் (Period of Time) கணக்கிடப்படும் பொருளாதார அளவே ஓட்ட (Flow) மாறிலி ஆகும்.
ஓட்ட (Flow) மாறிலிகளுக்கு எடுத்துக்காட்டு
- பேரியல் பொருளாதாரத்தில் வருவாய், மாத வருமானம், தேசிய வருவாய், ஏற்றுமதி, இறக்குமதி, நுகர்வு, உற்பத்தி மற்றும் முதலீடு முதலியன ஓட்ட மாறிலிகளுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
Similar questions