Science, asked by prernadhote8891, 10 months ago

எந்த இயற்பியல் பண்பளவு ஹெர்ட்ஸ் (Hz)
என்ற அலகினைக் கொண்டுள்ளது?
அதனை வரையறு.

Answers

Answered by steffiaspinno
1

அதிர்வெண் இயற்பியல் பண்பளவு ஹெர்ட்ஸ் (Hz) என்ற அலகினைக் கொண்டுள்ளது.

  • அதிர்வெண் 'n'  என்ற இயற்பியல் பண்பு ஹெர்ட்ஸ் (HZ)  என்ற அலகினை கொண்டுள்ளது.
  • இது நொடியில் ஏற்படும் ஒரு முழு சுழற்சி ஆகும்.
  • ஒரு வினாடி நேரத்தில் அதிர்வடையும் அதிர்வுகளின் எண்ணிக்கை  அதிர்வெண் ஆகும்.  
  • அதிர்வெண்ணிற்கான 'SI' அலகு ஹெர்ட்ஸ் (HZ) ஆகும் 20 ஹெர்ட்ஸ் முதல் 20000ஹெர்ட்ஸ் வரை அதிர்வெண் உடைய ஒலி அலைகளை மட்டுமே மனிதனின் காதுகளில் கேட்க முடியும்.
  • இவற்றை செவி உணர்வு அதிர்வெண் நெடுக்கம் என்று அழைக்கப்படுகிறது.
  • 20 HZ க்கு குறைவாக இருக்கும் அதிர்வெண்ணின் ஒலிகள் குற்றொலிகள் ஆகும் .
  • அதிர்வெண் 200000 HZ க்கு அதிகமாக ஒலி கொண்டவை மீயொலி  அல்லது மிகையொலி  என்று அழைக்கப்படுகிறது.
  • இந்த அளவு  ஒலிகளை மனிதன் காதுகளால் உணர முடியாது.
Similar questions