சரியான கூற்றுகளைக் கண்டுபிடிக்கவும்.
கூற்று I : ஆரம்பகால தேசியவாதிகளில் சிலர்
தேசியவாதத்தை இந்துமத
அடித்தளத்தில் மட்டுமே உருவாக்க
முடியும் என நம்பினர்.
கூற்று II : இந்து மகாசபை போன்ற அமைப்புகள்
எடுத்த முயற்சிகள், அன்னிபெசண்ட்
அம்மையாரால் நடத்தப்பட்ட
பிரம்மஞான சபையால் வலுப்பெற்றது. கூற்று III : ஆரிய சமாஜத்தின் சுத்தி மற்றும்
சங்காதன் நடவடிக்கைகளில்
காங்கிரஸ் பங்கேற்றது இந்து-
முஸ்லிம்களிடையே பிரிவை
உண்டாக்கியது.
(அ) I மற்றும் II (ஆ) I மற்றும் III
(இ) II மற்றும் III (ஈ) அனைத்தும்
Answers
Answered by
0
கூற்றுகள் சரியா தவறா
அனைத்து கூற்றுகளும் சரி
- ஆரம்பகால தேசியவாதிகளில் சிலர் தேசியவாதத்தை இந்துமத அடித்தளத்தில் மட்டுமே உருவாக்க முடியும் என நம்பினர்.
- 1875 ஆம் ஆண்டு ஆரிய சமாஜம் நிறுவப்பட்டது.
- சர்வப்பள்ளி கோபால் கூறியது போல ஆரிய சமாஜத்தின் மூலம் அரசியலில் இந்து மக்களுக்கான குரல் ஒலிக்கப்பட்டது.
- பசு பாதுகாப்பு கழகங்கள் இந்து வகுப்பு வாதம் வளர உதவியது.
- இந்து மகாசபை (ஆரிய சமாஜம்) போன்ற அமைப்புகள் எடுத்த முயற்சிகள், அன்னிபெசண்ட் அம்மையாரால் நடத்தப்பட்ட பிரம்மஞான சபையால் வலுப்பெற்றது.
- அன்னிபெசண்ட் அம்மையார் தன்னை ஓர் இந்து தேசியவாதியாக மாற்றினார்.
- ஆரிய சமாஜத்தின் சுத்தி மற்றும் சங்கதன் நடவடிக்கைகளில் காங்கிரஸ் பங்கேற்றது இந்து- முஸ்லிம்களிடையே பிரிவை உண்டாக்கியது.
Similar questions