(i) பதிற்றுப்பத்து பாண்டிய அரசர்களையும்
அவர்களின் ஆட்சிப் பகுதிகளையும்
குறித்துச் சொல்கிறது.
(ii) காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த
வணிக நடவடிக்கைகளை அகநானூறு
விவரிக்கிறது.
(iii) சோழர்களின் சின்னம் புலி ஆகும்;
அவர்கள் புலி உருவம் பொறித்த, சதுர
வடிவிலான செம்பு நாணயங்களை
வெளியிட்டார்கள்.
(iv) நெய்தல் என்பது மணற்பாங்கான
பாலைவனப் பகுதி ஆகும். அ) (i) சரி ஆ) (ii) மற்றும் (iii) சரி
இ) (iii) சரி ஈ) (iv) சரி
Answers
Answered by
1
Please convert it into English I don't understand it
Answered by
0
(iii) சரி
- சோழர்கள் சதுர வடிவில் ஆன நாணயங்களை வெளியிட்டனர்.
- மேலும் புலியின் உருவம் முகப்பிலும் யானைகள் மற்றும் புனித சின்னங்களும் மறுபுறத்திலும் காணப்படுகின்றன.
- அவர்களின் இலச்சினை புலி ஆகும்.
- சோழர்கள் உறையூர் என்னும் பகுதியை தலைநகரமாக கொண்டவர்கள்.
- மேலும் இவர்கள் தமிழ்நாட்டின் வடபகுதியையும் காவேரி வடிநிலப்பகுதியையும் ஆட்சி புரிந்தவர்கள்.
- இவர்களது துறைமுகமானது காவேரி ஆறு வங்கக் கடலில் கலக்கும் பூம்புகார் என்னும் காவேரிப் பூம்பட்டிணம் ஆகும்.
- பட்டினப்பாலை என்னும் நெடிய நூலில் காவேரிப் பூம்பட்டிணம் பற்றி கடியலூர் உத்திரக்கண்ணனார் என்ற சங்க புலவர் பாடலை பாடியுள்ளார்.
- காவேரிப்பூம்பட்டிணத்தில் சிறந்த வணிகம் நடைபெறுகிறது என்பதை சிலப்பதிகாரம் பாடலின் மூலம் தெரிந்து கொள்ளலாம் .
Similar questions