History, asked by Sabika6226, 11 months ago

பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி
அமைக்கவும்.
(i) இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு
(ii) நேருவின் தலைமையிலான இடைக்கால
அரசாங்கம்
(iii) மௌண்ட்பேட்டன் திட்டம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து
விடையினை தேர்ந்தெடுக்கவும்.
(அ) ii, i, iii (ஆ) i, ii, iii
(இ) iii, ii, I (ஈ) ii, iii, i

Answers

Answered by Anonymous
2

Answer:

hey mate

Explanation:

சுதந்திரப் போராட்டக் காலத்தில், இந்தியர்களின் உரிமையை மீட்டெடுக்கவும், நாட்டை இந்தியர்களே ஆள வேண்டும் என்பதிலும், அப்போதைய தலைவர்களும், கட்சிகளும் உறுதியாக இருந்தனர். இதன் நடுவே, 1939-ஆம் ஆண்டு தொடங்கிய இரண்டாம் உலகப் போரின் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பேரிழப்பைச் சந்தித்தன. இது இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் எதிரொலித்தது. இந்தியர்களின் நீண்டகால கோரிக்கையான ஆட்சியில் பங்குபெறுவது என்ற கனவு, இடைக்கால அரசு மூலம் நிறைவேறியது. 1946-ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி அமைந்த இடைக்கால அரசு, இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 வரை ஆட்சியில் இருந்தது.

உலக மக்களின் ரத்தங்களையும், சதைகளையும் கண்ட இரண்டாம் உலகப் போர், 1945-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதே ஆண்டு ஜூலை மாதம், பிரிட்டனில் தேர்தல் நடைபெற இருந்தது. இதனால், பிரிட்டன் மக்களிடம் நம்பிக்கையைப் பெறும் நோக்கில், இந்தியர்களின் நீண்டகால கோரிக்கையான அரசமைப்புச் சட்டத்தை அமைப்பதற்கான வழிமுறைகளை இந்தியாவின் அப்போதைய வைஸ்ராய் வேவல் மேற்கொண்டார். அவரது தலைமையில் 1945-ஆம் ஆண்டு ஜூன் மாதம், சிம்லாவில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் வைஸ்ராய் வேவல் முன்வைத்ததாவது:

 வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில், வைஸ்ராய் மற்றும் ராணுவத் தளபதி தவிர மற்ற அனைவரும் இந்தியர்களாக இருப்பர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், இடைக்கால அரசாக செயல்படுவர்.

 ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.

இரண்டாம் உலகப் போர் முழுவதுமாக முடிவுக்கு வந்தவுடன், இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை அமைப்பது குறித்து விவாதிக்கப்படும்.

வேவலின் திட்டத்துக்கு இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திய முஸ்லிம் லீக் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, ஜூலை மாதம் பிரிட்டனில் நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியைத் தோற்கடித்து, தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்றது. அக்கட்சியின் சார்பில் கிளமண்ட் அட்லீ பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவான கண்ணோட்டத்தைக் கொண்ட கிளெமண்ட் அட்லீ, பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்றதும் இந்தியத் தலைவர்களிடையே புது நம்பிக்கை பிறந்தது. அதே வேளையில், இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கக் கோரி அமெரிக்கா, அப்போதைய ஒருங்கிணைந்த ரஷியா உள்ளிட்ட நாடுகள் பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுத்தன. மேலும், போரின் காரணமாக பிரிட்டனின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இவற்றோடு, சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்துக்கும் ஆதரவு அலை தொடர்ந்து பெருகிக் கொண்டு வந்தது.

இவற்றின் காரணமாக, இந்தியாவுக்கென தனி அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க பெதிக் லாரன்ஸ், ஸ்டஃபோர்டு கிரிப்ஸ், ஏ.வி. அலெக்ஸாண்டர் ஆகியோர் அடங்கிய கேபினட் குழுவை அமைத்துள்ளதாக பிரிட்டன் பிரதமர் அட்லீ 1946-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி அறிவித்தார். அக்குழு மார்ச் 24-ஆம் தேதி இந்தியா வந்தடைந்தது. 1946-ஆம் ஆண்டு மே மாதம், கேபினட் குழு தனது திட்ட அறிக்கையை வெளியிட்டது.

1946-ஆம் ஆண்டு ஜூலை மாதம், இடைக்கால அரசின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும், அரசமைப்புக் குழுவின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில், ஒவ்வொரு மாகாணத்திலும் இருந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்தனர். மக்கள் நேரடியாக வாக்களிக்கவில்லை....

HOPE U LIKED IT ❤️✌️

Answered by steffiaspinno
1

கால‌ம் அடி‌ப்படை‌யி‌ல் வ‌ரிசை‌ப்படு‌த்துத‌ல்

நேருவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம்

  • 1946 ஆ‌ம் ஆ‌ண்டு ஜூ‌ன் 15‌ல் வேவ‌ல் ‌பிரபு இடை‌க்கால அரசை நட‌த்த ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், முகம்மது அலி ஜின்னா உ‌ட்பட 14 பேரு‌க்கு அழை‌ப்பு ‌விடு‌த்தா‌ர்.
  • கடை‌சி‌யி‌ல் நேருவின் தலைமையி‌ல் இடைக்கால அரசாங்கம் அமை‌க்க‌ப்ப‌ட்டது.  

இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு

  • பிரிட்டிஷ் பிரதம‌ர் ‌கிளம‌ண்‌ட் அ‌ட்‌லி 1947 ஆ‌ம் ஆ‌ண்டு ‌பி‌ப்ரவ‌ரி மாத‌ம் 20 ஆ‌ம் தே‌தி பாராளும‌‌ன்ற‌த்‌தி‌ல் அ‌றி‌‌க்கையை வெ‌ளி‌யி‌ட்டா‌ர்.  
  • அத‌ன் படி இந்தியர் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படும் என அ‌றி‌வி‌த்தா‌ர்.  

மௌண்ட்பேட்டன் திட்டம்

  • 1947 ‌ஆ‌ம் ஆ‌ண்டு ஜூ‌ன் 3‌ம் தே‌தி மெள‌ண்‌ட்பே‌ட்ட‌ன் இ‌ந்‌தியா‌வி‌ற்கு ஆ‌க‌ஸ்‌ட் 15 ஆ‌ம் தே‌தி சுத‌ந்‌திர‌ம் வழ‌ங்க‌ப்படு‌ம் என அ‌றி‌வி‌த்தா‌ர்.
Similar questions