Social Sciences, asked by notiyashu6168, 10 months ago

i) ராஜா ராம்மோகன் ராய் ஒரு கடவுள்
கோட்பாட்டை போதித்தார்.
ii) அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார்.
iii) சமூகத் தீமைகளைக் கண்டனம் செய்வதை
எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளியிட்டார்.
iv) ராஜா ராம்மோகன் ராய் கவர்னர் வில்லியம்
பெண்டிங்கால் ஆதரிக்கப்பட்டார்.
அ) i) சரி
ஆ) i) , ii) ஆகியன சரி
இ) i), ii), iii) ஆகியன சரி
ஈ) i), iii) ஆகியன சரி

Answers

Answered by latishadwani705
0

Explanation:

CAN'T UNDERSTAND THE LANGUAGE LIKE THIS

Answered by anjalin
1

விடை. i) , iv) ஆகியன சரி

  • உபநிடதங்களுக்குத் தான்கொடுத்த விளக்கங்களின் அடிப்படையில் இந்துக்களின், மறைநூல்கள் அனைத்தும் ஒருகடவுள் கோட்பாட்டை அல்லது  ஒரு கடவுளை வணங்குவதை உபதேசிப்பதாகக்  கூறினார்.  
  • சமூகத்தில் நிலவிவரும் உடன்கட்டை ஏறுதல் (சதி) குழந்தைத் திருமணம், பலதார மணம்  போன்ற மரபு சார்ந்த பழக்கங்கள் குறித்து பெரிதும்  கவலை கொண்ட அவர், அவற்றிற்கு எதிராகச்  சட்டங்கள் இயற்றும்படி ஆங்கில அரசாங்கத்திற்கு  விண்ணப்பித்தார்.
  • விதவைப்பெண்கள் மறுமணம்  செய்துகொள்ள உரிமை உடையவர்கள் எனும்  கருத்தை முன்வைத்தார்.
  • பலதார மணத்திற்கு  முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென்றார்.  அவருடைய கருத்துகளைப் பழமைவாத இந்துக்கள் எதிர்த்தனர்.
  • மக்களைப்பகுத்தறிவோடும், பரிவோடும்,  மனிதப் பண்போடும் இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். கல்கத்தாவின் இடுகாடுகளுக்குச் சென்று  விதவைகளின் உறவினர்களிடம் உடன்கட்டை ஏறும் வழக்கத்தைக் கைவிடும்படி வேண்டிக்  கேட்டுக்கொண்டார். 1829இல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் 'சதி' எனும்  உடன்கட்டையேறும் பழக்கத்தை ஒழித்துச் சட்டம்  இயற்றியதில் ராஜாராம் மோகன் ராய் முக்கிய பங்கு  வகித்தார்.

Similar questions