India Languages, asked by yadvendra4099, 10 months ago

கீழ்கண்டவற்றுள் எது புவிநிலை செயற்கைக்கோள் ?
அ) INTELSAT ஆ) Corona
இ) MIDAS ஈ) SAMOS

Answers

Answered by steffiaspinno
0

INTELSAT

புவிநிலை செயற்கைக்கோள்க‌ள்

  • பு‌‌வி நடு‌க்கோ‌ட்டு‌ப் பகு‌தி‌யி‌ல் சுமா‌ர் 35000 ‌கி.‌மீ உயர‌த்‌தி‌ல் மே‌ற்‌கி‌ல் இரு‌ந்து ‌கிழ‌க்‌கு நோ‌க்‌கி சு‌ற்‌றி வரு‌ம் செய‌ற்கை‌க்கோ‌ள்க‌ள் புவிநிலை செயற்கைக்கோள்க‌ள் ஆகு‌ம்.
  • இவ‌ற்‌றி‌ன் சுழ‌ற்‌சி‌க்கான கால அளவு 24 ம‌ணி நேர‌ம் ஆகு‌‌ம்.  
  • இவை ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் க‌ண்கா‌ணி‌த்து தொட‌ர்ச்‌சியாக  தகவ‌ல்களை சேக‌ரி‌க்‌‌கி‌ன்றது.
  • இத‌ன் பட‌ம் ‌பிடி‌க்கு‌ம் பர‌ப்பு ஆனது 70° வடக்கு முதல் 70° தெற்கு அட்சம் வரை உள்ள பகுதி ஆனது.
  • பு‌வி‌‌யி‌ன் ‌மூ‌ன்‌றி‌ல் ஒரு ப‌ங்கு பகு‌தி‌யினை ஒரே நேர‌த்‌தி‌ல் க‌ண்கா‌ணி‌க்க செ‌ய‌ற்கை‌க் கோளா‌ல் இயலு‌ம்.
  • GOES, METEO SAT, INTEL SAT மற்றும் INSAT செயற்கைகோள்கள் புவிநிலை செயற்கைக்கோள்க‌ள் வகை‌யினை  சார்ந்தது.  
Similar questions