. IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை மின்னொட்டு_________.
அ. ஆல் ஆ. ஆயிக் அமிலம் இ. ஏல் ஈ. அல்
Answers
Answered by
0
ஏல்
IUPAC பெயரிடுதலில் பின்னொட்டு
- IUPAC பெயரிடுதலில் பின்னொட்டுகள் கரிமச் சேர்மத்தின் இறுதியில் இடம்பெறும்.
- பின்னொட்டுகள் முதன்மை பின்னொட்டு மற்றும் இரண்டாம் நிலை பின்னொட்டு என இரு பகுதிகளை உடையது.
- இவற்றில் முதன்மை பின்னொட்டு கார்பன் உடனான பிணைப்பினை குறிக்கிறது.
- அதாவது கார்பன் உடனான பிணைப்பு ஒற்றை பிணைப்பாக இருந்தால் யேன் எனவும், இரட்டை மற்றும் முப்பிணைப்புக்கு முறையே ஈன் மற்றும் ஐன் எனவும் குறிக்க வேண்டும்.
- இரண்டாம் நிலை பின்னொட்டு வினை செயல் தொகுதியினை குறிக்கிறது.
- அதாவது ஆல்கஹால் தொகுதிக்கு ஆல் எனவும், ஆல்டிஹைடுக்கு ஏல் எனவும், கீட்டோனுக்கு ஓன் எனவும், கார்பாக்சிலிக் அமிலத்திற்கு ஆயிக் அமிலம் எனவும் குறிக்க வேண்டும்.
Similar questions
Math,
6 months ago
Hindi,
6 months ago
India Languages,
1 year ago
Physics,
1 year ago
History,
1 year ago