India Languages, asked by StarTbia, 1 year ago

எழிலிரு புயமும் குன்று போலுற வீங்கின
உவமையைப் பொருளுடன் பொருத்தி எழுதுக./ Write the parable with meaning
சீறாப்புராணம்

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


எழிலிரு புயமும் குன்று போலுற வீங்கின.


உவமை : இருமலை


உவமேயம் : இருதோள்கள்.


உவம உருபு : போல்.


பொருத்தம் :


காட்டில் வாழும் மற்ற விலங்குகளுக்கும், அவ்வழியே வரும் மக்களுக்கும் புலிக்கு அஞ்சி வாழும் செய்திகள் அனைத்தையும் முகம்மது நபிகள் கேட்டறிந்தவுடன், அவரது அழகிய இரு தோள்களும் வீரத்தால் மலைகளைப் போலப் பருத்தன என்று இரு தோள்களை இரு மலைகளுக்கு ஒப்பாக அழகுற உவமைப்படுத்தி சீறாப்புராணம் விளக்குகிறது.



விளக்கம்:



இரு தோள்களை இரு மலைகளுக்கு ஒப்பாக அழகுற உவமைப்படுத்திய, " எழிலிரு புயமும் குன்று போலுற வீங்கின" என்னும் தொடர், விலாதத்துக் காண்டம் – புலி வசனித்த படலத்தில் வரும் " என்ற வாசகம் செவிபுக " என்று தொடங்கும் பாடலில் வருகிறது.


Similar questions