India Languages, asked by masskishore3075, 10 months ago

ஈ) மனித இன முன்னோடிகள் பயன்படுத்திய கல்லால் ஆன ஆயுதங்கள் சிலவற்றைக் கூறுக.

Answers

Answered by anjalin
1

கல்லால் ஆன ஆயுதங்கள்

  • கைக்கோடரிகளும் பிளக்கும் கருவிகளும்தான் முக்கியமான கருவி வகைகள்.
  • இந்தக் கருவிகளை மரத்தாலும் எலும்பாலுமான கைப்பிடியில் செருகி வெட்டுவதற்கு, குத்துவதற்கு, தோண்டுவதற்குப் பயன்படுத்தினார்கள்.
  • அவர்கள் சுத்தியல் கற்களையும், கோளக் கற்களையும் கூடப் பயன்படுத்தினார்கள்.
  • அதற்காகக் கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்தார்கள். இந்தக் கருவிகள் மணல் திட்டுகளிலும் ஆற்றங்கரைகளிலும் காணப்படுகின்றன.
  • அவை பல்லாவரம், குடியம் குகை, அதிரம்பாக்கம், வடமதுரை, எருமை  வெட்டிப்பாளையம், பாரிகுளம் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன.
  • சுரண்டும் கருவிகள் ஒரு மேற்பரப்பைச் சுரண்டுவதற்குப் பயன்படுகின்றன. இவை இன்று சமையலறையில் காய்கறிகளின் தோலை  அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகளைப் போன்றவை.
  • கருவிகளையும் கலைப் பொருட்களையும் செய்யக் கொம்புகளும் தந்தங்களும் பயன்படுத்தப்பட்டன.
  • எலும்பாலான ஊசிகள், தூண்டில் முட்கள், குத்தீட்டிகள், ஈட்டிகள் ஆகியவை  படைப்பாக்கத்துடன் பயன்படுத்தப்பட்டன.
Similar questions