India Languages, asked by Akhiltty3472, 11 months ago

பிரான்சின் தேசியச் சட்டமன்றத்தின்
தலைவர் _________ ஆவார்

Answers

Answered by steffiaspinno
0

பிரான்சின் தேசியச் சட்டமன்றத்தின்

தலைவர் மிரபு ஆவார்.

  • தேசியச் சட்ட மன்றம்  மிதவாதத் தாராளவாதிகளைக் கொண்டிருந்த்து.
  • இந்த தேசியச் சட்ட மன்றம் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ளதைப் போல ஓர் அரசியலமைப்பை உருவாக்க விரும்பியது.
  • தேசியச் சட்ட மன்றத்தின்  தலைவர் மிரபு என்பவராவார்.  இந்தச்  சட்டமன்றம் நடுத்தர வர்க்கத்தினரால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
  • விவசாயிகளுக்கும் , சாமானியர்களுக்கும்  இந்த தேசிய சட்டமன்றம் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.
  • தேசியச் சட்டமன்றமானது பண்ணை அடிமை முறைநிலப்பிரபுத்துவதனியுரிமைகள்,வரிக்கட்டுவதிலிருந்து  பிரபுக்களுக்கும் மதகுருமார்களுக்கும் அளிக்கப்பட்டிருந்த விலக்கு, அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பட்டங்கள், நிலப்பிரபுத்துவ நீதிமன்றங்கள் ஆகியனவற்றை ஒழித்துக் கட்டியது.
  • இதனை தொடர்ந்து ‘‘மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைகள் பிரகடனம்’’ இயற்றப்பட்டது.
  • மனிதன் மற்றும்  குடிமகனின் உரிமைகள் பிரகடனமானது  லஃபாயட், தாமஸ் ஜபெர்சன், மிரபு ஆகியோர்களால் எழுதப்பட்டது.

Similar questions