India Languages, asked by hemantmehta3060, 11 months ago

பசுமை குடில் விளைவு என்றால் என்ன?

Answers

Answered by Indianpatriot
0

Answer:

Explanation:

ல ஊடகங்களில் தற்பொழுது, "பூமி வெப்பம் அதிகரிக்கிறது", "கால நிலை மாற்றம்", "பனிக்கட்டிகள் உருகுகின்றன" என்பது போன்று தலைப்பிட்டு செய்திகளை படித்து / பார்த்திருப்பீர்கள். இதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்கிறார்கள். இதன் நடுவே, இதில் அரசியல் வேறு உள்ளே புகுந்துவிட்டது. அதனால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் எல்லாம் கேள்விக் குறியாகி உள்ளது.

சரி, இந்த இடுக்கை அதைப் பற்றி எல்லாம் பேசப் போவதில்லை.

இதில் நான் எடுத்துக் கொண்ட விடயம், பசுமைக் குடில் விளைவு!. இந்த வார்த்தையை பல இடங்களில் கேட்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு எளிய தமிழில் விளக்கம் பெறுவது என்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால், இந்த "பசுமைக் குடில் விளைவு" என்றால் என்ன? அதன் விளைவு என்ன?!, என்று இதைப் பற்றி நான் அறிந்தவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

குளிர் பிரதேசங்களில் (ஊட்டி) சில செடிகளை வளர்க்க ஒரு கண்ணாடி அறையை வைத்து அதில் வளர்ப்பார்கள். இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது எதற்கு?

அதாவது பகலில் ஏற்படும் வெப்பம், இரவில் இல்லாமல் போய்விடும். இதனால் அந்த செடிகள் பயனற்றுப் போகும். இதை தடுக்கத்தான் இந்த கண்ணாடிக் குடில்

Answered by steffiaspinno
3

பசுமை குடில் விளைவு :

  • கார்பன்-டை- ஆக்சைடு, மீத்தேன், நீர்மூலக்கூறுகள்,  குளோரோ புளோரோ கார்பன் (CFC), கார்பன்  மோனாக்சைடு, ஒளிப்பட வேதியியல்  தனிமங்கள் மற்றும் ஹைட்ரோ கார்பன்  போன்ற பசுமைக்குடில் வாயுக்கள் வளிமண்டலத்திலிருந்து  வெப்பத்தை வெளியேற்றாமல் தக்க  வைக்கிறது.
  • இந்த வாயுக்கள் வளி மண்டலத்தின் வெப்ப ஏற்புத்திறனை அதிகரிக்கச் செய்யவும்  காரணமாக அமைகிறது.
  • உலக வெப்ப மயமாதலால், காலநிலை மாற்றம், ஓசோன் படலம் பாதிக்கப்படுதல், கடல்மட்டம்  உயருதல், கடலோர நிலப்பகுதிகளைக் கடல் ஆட்கொள்ளுதல், பனிக்கட்டி உருகுதல்  போன்றவை ஏற்படுகின்றன.
  • உலக  வெப்பமயமாதல் மனித இனத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
  • எனவே மனிதன்  சுற்றுச்சூழலை மாசுபடுவதிலிருந்து பாதுகாப்பதற்குத்  தீவிரமாகச் செயலாற்ற வேண்டும்.
Similar questions