ஆகுபெயர் அமையுமாறு தொடர்களை மாற்றி எழுதுக.
அ. மதுரை மக்கள் இரவிலும் வணிகம் செய்கின்றனர்.
ஆ. இந்திய வீரர்கள் எளிதில் வென்ற னர்.
இ. நகைச்சுவை நிகழ்வைப் பார்த்து அரங்கத் தில் உள்ளவர்கள் சிரித்தனர்.
ஈ. நீரின்றி இவ்வுலக மக்களால் இயங்க முடியாது.
Answers
ஆகுபெயர்
- ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்கு தொன்றுதொட்டு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
ஆகுபெயரின் வகைகள்
முதலாகுபெயர்
கருத்தவாகு பெயர்
இடவாகுபெயர்
பண்பாகுபெயர்
எண்ணளவை ஆகுபெயர்
காலவாகு பெயர்
கருத்தவாகு பெயர்
நீட்டலளவை ஆகுபெயர்
காரியவாகு பெயர்
(அ) மதுரை மக்கள் இரவிலும் வணிகம் செய்கின்றனர்.
மதுரை இரவிலும் வணிகம் செய்கின்றது - இடவாகுபெயர்
மதுரை என்னும் இடத்தைக் குறிக்கிறது.
(ஆ)இந்திய வீரர்கள் எளிதில் வென்றனர்.
இந்தியா எளிதில் வென்றது - இடவாகுபெயர்
இந்தியா என்னும் நாட்டைக் குறிக்கிறது.
(இ)நகைச்சுவை நிகழ்வைப் பார்த்து அரங்கத்தில் உள்ளவர்கள் சிரித்தனர்.
நகைச்சுவை நிகழ்வைப் பார்த்து அரங்கமே சிரித்தது - பண்பாகுபெயர்
நகைச்சுவை என்னும் பண்பைக் குறிக்கிறது.
(ஈ) நீரின்றி இவ்வுலக மக்களால் இயங்க முடியாது.
நீரின்றி இவ்வுலகத்தால் இயங்க முடியாது - முதலாகுபெயர்
நீர் என்பது இவ்வுலகிற்கு முதன்மையான பொருளாகும்.