ஆண்டா ளின் கனவுக் கா ட்சிகளை எழுதுக.
Answers
Answered by
26
ஆண்டாளின் கனவு காட்சிகளை எழுதுக;
- ஆழ்வார்கள் பாடிய பாடலின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகும். இத்தொகுப்பில் ஆண்டாள் பாடிய பாடல்கள் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகும். நாச்சியார் திருமொழி மொத்தம் 140 பாடல்களைக் கொண்டது.
அதிரப் புகுந்தது
- ஆடும் இளம் பெண்கள் கைகளில் ஆதவனை போன்ற ஒளியினை உடைய விளக்கையும், கலசத்தையம் உடைய ஏந்தியவாறு உள்ளனர்.
- வடமதுரையை ஆளும் மன்னன் கண்ணன் பாதுகைகளை அணிந்துக் கொண்டு பூமி அதிர நடந்து வருவதாக ஆண்டாள் கனவு கண்டாள்.
- அதிரப் புகுத கனாக் கண்டேன் என்ற வரியில் ஆண்டாளின் கனவில் கண்ணன் அதிரப் புகுந்தார்.
பந்தலில் புகுந்தது
- மத்தளம் போன்ற இசைக் கருவிகளை இசைத்தனர். வரிகளை உடைய சங்குகளை ஊதுகின்றனர்.
- அத்தை மகனும், மது என்ற அரக்கனை அழித்தவனும் ஆகிய கண்ணன் முத்துக்களை உடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலில் புகுந்தான்.
- என்னை திருமணம் செய்து கொள்கிறான் என ஆண்டாள் தன் கனவில் கண்ணனை கண்டதை கூறுகிறாள்.
Answered by
20
Explanation:
ஆண்டாள் தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும், ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாக கருதப்படுகிறார்.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Chemistry,
1 year ago
Science,
1 year ago