Social Sciences, asked by pgracevolau6163, 11 months ago

அயோத்தி தாசர் இலங்கை சென்றபோது
நடந்த நிகழ்வு என்ன?

Answers

Answered by Anonymous
1

Explanation:

அயோத்தி தாசர் (C. Iyothee Thass, மே 20, 1845 –மே 5, 1914) தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர். ஆதி திராவிட பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவிரமாகச் செயல்பட்டார். பௌத்தத்திற்கு மாறிய இவர் பறையர்களின் மூலச் சமயம் பௌத்தம் என்றும் அதனால் அவர்கள் பௌத்தத்திற்குத் மாறவேண்டும் அறிவுறுத்தினார்.[2] 1891 இல் இரட்டைமலை சீனிவாசனுடன் இணைந்து பஞ்சமர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். பஞ்சமர் என்போர் வருணாசிரம முறையில் வராமல், அவர்ணாக்கள் என அழைக்கப்பட்டனர்.

Answered by anjalin
1

அயோத்தி தாசர் இலங்கை சென்ற போது நடந்த நிகழ்வு

  • 1898ஆம் ஆண்டு அயோத்திதாசர் இலங்கை சென்றார் அங்கு அவர் பௌத்தத்தைத் தழுவினார்.
  • அந்த ஆண்டில் பௌத்த மதத்தின் வழியாக பகுத்தறிவின் அடிப்படையில் சமய தத்துவத்தை கட்டமைப்பு செய்வதற்காக சாக்கிய பௌத்த சங்கம் என்னும் ஒரு அமைப்பை சென்னை மாகாணத்தில் நிறுவினார்.
  • பிராமணர்களால் கீழ்நிலையில் இழிவுபடுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் உண்மையான பௌத்தர்கள் என அவர் வாதிட்டார்.
  • மேலும் தீண்டத்தகாத அவர்களை ஜாதி பேதமற்ற திராவிடர் எனவும் அவர் அழைத்தார்.
  • மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தீண்டத்தகாத மக்களை சாதியற்ற திராவிடர்கள் எனவும் பதிவு செய்யுமாறு வலியுறுத்தினார் .
Similar questions