சொல்லமைப்பின் அடிப்படையில், மொதிநிலைகள் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன?
அவற்றுள் ஏதேனும் ஒன்றை விளக்குக.
Answers
Answered by
1
சொல்லமைப்பின் அடிப்படையில் மொழிநிலைகள்:
- சொல்லமைப்பின் அடிப்படையில், மொழிநிலைகள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது. அவை தனிநிலை, உட்பிணைப்பு நிலை மற்றும் ஒட்டு நிலை ஆகும்.
தனிநிலை
- சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேராமல் தனித்தனியாக இருந்து பொருள் தருவது தனிநிலை அமைப்பு ஆகும். (எ.கா) சீன, திபெத் மொழிகள்
உட்பிணைப்பு நிலை
- ஒரு மொழியின் அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது இரண்டும் சிதைந்தும் ஒன்றுப்பட்டு நிற்கும். அத்தகைய அமைப்பு உட்பிணைப்பு நிலை என அழைக்கப்படுகிறது. (எ.கா) ஐரோப்பிய மொழிகள்
ஒட்டுநிலை
- அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது ஒன்று சிதைந்தும் மற்றொன்று சிதையாமலும் நிற்கும் அமைப்பு ஒட்டு நிலை எனப்படும். (எ.கா) திராவிட மொழிகள்
Similar questions
Math,
4 months ago
English,
4 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Chemistry,
1 year ago
Physics,
1 year ago