Science, asked by preetisaroj1375, 10 months ago

தொற்றாத வகை நோய்கள் ஒரு மனிதனிடமிருந்து வளர்ந்து பிறருக்கு
பரவுவதாகும்.

Answers

Answered by Anonymous
0

Explanation:

நோய் (வியாதி, பிணி) என்பது உயிரினங்களின் உடலிலோ, மனதிலோ ஏற்படும் அசாதாரண நிலைகளைக் குறிக்கும். இதனை நலமற்ற நிலை, சீரழிந்த நிலை எனலாம். நோய் மனித வாழ்வின் நிலையான துன்பங்களில் ஒன்று. நோய் பொதுவாக அறிகுறிகள் (signs) மற்றும் உணர்குறிகளுடன் (symptoms) தொடர்புடைய மருத்துவ நிலை எனலாம்[1]. நோய் ஏற்படும்போது, நோய்வாய்ப்படும் உயிரினம் சில அசெளகரியங்களை, சீரற்ற நிலையை அல்லது அசாதாரண நிலையை உணர்தல் உணர்குறி என்றும், மருத்துவருக்குத் தெரியக்கூடிய அசாதாரண நிலைகள் அறிகுறிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

நோயானது உள்ளகக் காரணிகளாலும், வெளிக் காரணிகளாலும் தோற்றுவிக்கப்படலாம். நோய்க்காரணிகளால் ஏற்படக்கூடிய தொற்றுநோய்கள் வெளிக்காரணிகளால் ஏற்படும் நோய்களாகும். உடலின் செயற்பிறழ்வுகளால் ஏற்படும் தன்னெதிர்ப்பு நோய்கள் உள்ளகக்காரணிகளால் ஏற்படும் நோய்களாகும்.

வலியை உண்டாக்கும் நிலைகள், உடலின் செயற்பிறழ்வுகள், கடுந்துன்பம் ஏற்படுத்துபவை, சமூகப் பிரச்சனைகளை உண்டாக்குபவை, ஒருவருக்கு மரணத்தை விளைவிக்கக்கூடியவை அல்லது நோய்வாய்ப்பட்டவருடன் உள்ளத் தொடர்பால் பிறருக்கு மரணத்திற்கு இணையாக நிகழும் பிரச்சனைகள் என மனிதர்களில் நோய் என்பது விரிவானதொரு பொருளில் உபயோகப்படுத்தப்படுகிறது. இத்தகு விரிவானதொரு பொருளில் சிலநேரங்களில், பிற சூழல்கள் அல்லது நோக்கங்களுக்காகத் தனித்துவமாக வகைப்படுத்தக்கூடியவையாக உள்ள காயங்கள், உடல் ஊனங்கள், நலச் சீர்கேடுகள், நோய்க்கூட்டறிகுறிகள், நோய்த்தொற்றுகள், தனிப்பட்ட நோய் உணர்குறிகள், பொது நிலையிலிருந்து விலகிய நடத்தைகள், மனித வடிவம் மற்றும் செயல்களில் உள்ள அசாதாரணமான வேறுபாடுகள் ஆகிய அனைத்தையும் நோய் என்றே குறிப்பிடுகின்றோம். சாதாரணமாக பிணிகள் உடலளவில் மட்டுமல்லாது உணர்வுப்பூர்வமாகவும் மனிதர்களைப் பாதிக்கின்றன. பலவிதமான வியாதிகளுடன் நோய்வாய்ப்பட்டு வாழ்வது வாழ்வைப் பற்றிய ஒருவரின் கண்ணோட்டத்தினை, மனோபாவத்தினை முற்றிலுமாக மாற்றியமைக்கக்கூடியதாகும்.

நோய்வாய்ப்பட்டு இறப்பது இயற்கையான மரணமாகக் கருதப்படுகிறது. நோய்களை நோய் விளைவிக்கின்றவை, குறைபாட்டு நோய், பரம்பரை வியாதி, உடலியக்கப் பிறழ்வுகள் என நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். நோய்களைத் தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் என்றும் பிரிக்கலாம். மனிதர்களில் கொடிய வியாதியாகக் குருதியோட்டத்தைத் தடுக்கும் வளி குறைபாட்டு இதயநோயையும் (ischemic heart disease)[2], இதற்கு அடுத்ததாகப் பெருமூளை குருதிக்குழல் நோய் (cerebrovascular disease), கீழ் சுவாசக்குழாய்த் தொற்றுகள் (lower respiratory infections)

Answered by steffiaspinno
0

தொற்றாத வகை நோய்கள் ஒரு மனிதனிடமிருந்து வளர்ந்து பிறருக்கு  பரவுவதாகும் - தவறு

  • நோயு‌‌ற்ற ஒரு ம‌னித‌ரிட‌மிரு‌ந்து ம‌ற்றோரு ம‌னித‌ரு‌க்கு நோ‌ய் பர‌‌வுதலையே தொ‌ற்று நோ‌ய் எ‌‌‌ன்‌கிறோ‌ம்.
  • இ‌வ்வாறு  நோ‌ய்களை  பர‌ப்புத‌லி‌ல் ‌வீ‌ட்டு ஈ ம‌ற்று‌ம் கொசு ஆ‌கியவை மு‌க்‌‌கிய ப‌ங்கு வ‌‌கி‌க்‌கி‌‌ன்றன.
  • க‌க்குவா‌ன் இரும‌ல், ‌சி‌க்க‌ன் கு‌‌ன்‌னியா, மலே‌ரியா, ‌‌பிலே‌ரியா, டெ‌ங்கு கா‌ய்‌ச்ச‌ல் ஆ‌கியவை தொ‌ற்று‌ம் நே‌ா‌ய்களாகு‌ம்.
  • தொ‌ற்றாத நோ‌ய்க‌‌ள் எ‌ன்பவை உட‌ல் சா‌ர்‌ந்த நோ‌ய்களான இதய நோ‌ய், நீ‌ரி‌ழிவு நோ‌ய், ப‌க்கவாத‌‌ம், மு‌‌ன்கழு‌‌த்து‌க் கழலை நோ‌‌ய் , உட‌ல் பரும‌ன் ஆ‌கியவை ஆகு‌ம்.
  • இவை பரவு‌ம் த‌ன்மை அ‌ற்றவை. உட‌லி‌‌ன் இய‌ங்காத பா‌க‌ங்க‌ள்‌, மரபு‌க் கார‌ணிக‌ள், ஹ‌ா‌ர்மோ‌ன்க‌ளி‌‌ல் ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌ம் ம‌ற்று‌ம் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு அமை‌ப்‌பிலு‌ள்ள குறைபாடு ‌ஆ‌கியவ‌ற்றா‌ல் தொ‌ற்றா நோ‌ய்க‌ள் உருவா‌கி‌ன்றன.
  • என‌வே  தொற்றாத வகை நோய்கள் ஒரு மனிதனிடமிருந்து வளர்ந்து பிறருக்கு பர‌வுவ‌தி‌ல்லை.
Similar questions