பிபின் சந்திரபாலின் விடுதலை தினத்தை
திருநெல்வேலியில் சுயராஜ்ய தினமாக சுதேசி
இயக்கத் தலைவர்கள் கொண்டாட
திட்டமிட்டதின் விளைவு யாது?
Answers
Answered by
0
Ni soluvadu onka purita
Answered by
1
பிபின் சந்திரபாலின் விடுதலை தினத்தை
திருநெல்வேலியில் சுயராஜ்ய தினமாக சுதேசி இயக்கத் தலைவர்கள் கொண்டாட திட்டமிட்டதின் விளைவு:
- பிபின் சந்திர பாலின் விடுதலை தினத்தை திருநெல்வேலியில் சுயராஜ்ய தினமாக சுதேசி இயக்கத் தலைவர்கள் கொண்டாடினர்.
- இதற்கு ஆங்கில அரசு அனுமதி மறுத்தது. இதனை மீறி செயல்பட்ட வ.உ.சி, சிவா மற்றும் பத்மநாபர் ஆகியோர் 1908 ல் கைது செய்யப்பட்டனர்.
- முக்கிய தலைவர்கள் கைது செய்ததை எதிர்த்து மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் கடை அடைப்பிலும் ஈடுபட்டனர்.
- திருநெல்வேலியில் உள்ள காவல் நிலையம் மற்றும் நகர சபை கட்டிடம் தீ வைக்கப்பட்டது.
- நூற்பாலை தொழிலாளர்கள் ஆலையினை விட்டு வெளியேறி போராட்டம் செய்தனர்.
- போராட்டத்தில் ஈடுபட்டோரை தடுக்கும் விதமாக காவல் துறையினர் துப்பாக்கி சுடுதலில் ஈடுபட்டனர். இதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
Similar questions