இத்தாலிய மற்றும் ஆங்கிலேய
கடல்பயணிகளின் சாதனைகள் என்ன?
Answers
Answered by
0
இத்தாலிய மற்றும் ஆங்கிலேய கடல்பயணிகளின் சாதனைகள்
- போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் நாட்டினை போல கடற்பயணம் செய்து புதிய நிலப்பகுதிகளை கண்டுபிடிக்கும் எண்ணத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளும் ஈடுபட்டன.
- உலகின் பல புதிய நிலப் பகுதிகளை கண்டுபிடிப்பதற்காக இத்தாலிய கடற்பயணி ஜான் கேபடை இங்கிலாந்து நியமித்தது.
- அவர் தனது பயணத்தின் போது கனடாவினை கண்டுபிடித்தார்.
- அதனை ஆங்கில காலனியாக மாற்றினார். மற்றொரு இத்தாலிய கடற்பயணி ஜியோவனி டா வெர்ராசானோ பிரான்ஸ் நாட்டுக்காக கிழக்கு கனடாவினை ஆராய்ந்து பல மாகாணங்களை பிரான்ஸ் காலனியாக மாற்றினார்.
- ஆங்கிலேய கடற்பயணியான ஹென்றி ஹட்சன் என்பவர் வட அமெரிக்காவில் இருந்து பசிபிக் பெருங்கடல் பகுதிக்கு பாதை காண முயன்று தோற்றார்.
- எனினும் அவர் ஆராய்ந்த பகுதி ஹட்சன் நதி என்ற பெயரில் உள்ளது.
Similar questions