History, asked by krsanjeev929, 11 months ago

கூற்று: வளர்ந்து கொண்டிருந்த பூர்ஷ்வாக்கள்
தங்கள் சமூகத்தகுதிக்கு நிகரான அரசியல்
அதிகாரம் வேண்டினர்.
காரணம்: அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற
வேண்டுமென அவர்கள் விரும்பினர்.
(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம்
கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால்
காரணம் கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி. காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு. காரணம் சரி.

Answers

Answered by steffiaspinno
2

கூ‌ற்று ம‌ற்று‌ம் காரண‌ம்

கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம்  கூற்றை விளக்குகிறது.

  • பிரெஞ்சு சமூகம் மூன்று முக்கியப் பிரி‌வினை உடையதாக இரு‌ந்தது.
  • அவை முறையே மதகுருமார்கள், நிலப்பிரபுக்கள் (நிலங்களைக் கொண்ட உயர் குடிகள்) ம‌ற்று‌ம் உரிமைகளற்ற சாதாரண மக்கள் ஆகியனவாகும்.
  • இ‌‌தி‌ல் மதகுருமா‌ர்‌க‌ள் ம‌ற்று‌ம் ‌பிரபுக‌ள் ‌சிற‌ப்பு உ‌ரிமைகளை பெ‌ற்றன‌ர்.‌
  • அவ‌ர்க‌ளு‌க்கு வ‌ரி ‌வில‌க்கு இரு‌ந்தது.
  • ஆனா‌ல் உரிமைகளற்ற சாதாரண மக்கள் அவ‌ர்களு‌க்கு சே‌ர்‌த்து டைத் வரி, டெய்ல் நிலவரி, காபெல் எனும் உப்பின் மீதான வரி, புகையிலையின் மீதான வரி  முத‌லிய வ‌ரி‌யினை‌‌க் காட்டின‌ர்.
  • வளர்ந்து கொண்டிருந்த பூர்ஷ்வாக்கள் (நடுத்தர வர்க்கத்தினரின் தொகுப்பு)  தங்கள் சமூகத்தகுதிக்கு நிகரான அரசியல் அதிகாரம் வேண்டினர்.
  • அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற வேண்டுமென  பூர்ஷ்வாக்கள்  விரும்பினர்.
Similar questions