தொழிற்புரட்சியின் சிறப்புக்கூறுகளை
முன்னிலைப்படுத்திக் காட்டவும்.
Answers
Answered by
0
தொழிற்புரட்சி
- மிகப் பெரிய ஆலைகளில் அதிக அளவிலான பொருட்களை உற்பத்திச் செய்யும் வழி முறைகளை பின்பற்றுதலைக் குறிக்கும் முறையே தொழிற்புரட்சி ஆகும்.
- இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சி பல்வேறு கண்டுபிடிப்புகளை வழங்கியது.
தொழிற்புரட்சியின் சிறப்புக் கூறுகள்
- தொழிற் புரட்சியின் போது தொழில்களில் அறிவியல் தொழில் நுட்பம் கொண்டு வரப்பட்டது.
- இரும்பு மற்றும் எஃகு ஆகியவற்றின் பயன்பாடுகள் அதிகரித்தன.
- நிலக்கரி மற்றும் நீராவி போன்ற ஆற்றலுக்கான புதிய மூலப்பொருட்களின் பயன்பாடு கொண்டு வரப்பட்டன.
- புதிய இயந்திரங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டன.
- இதனால் உற்பத்தி பெருகியது.
- ஆலை முறை என்று அழைக்கப்பட்ட வேலைகள் ஒழுங்குப்படுத்தப்பட்டன.
- போக்கு வரத்து மற்றும் செய்தித் தொடர்பு முதலியனவற்றில் முன்னேற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
Similar questions