இராமலிங்கர் இளமையிலேயே சொற்பொழிவாற்றும் திறன் பெற்றிருந்தமையை விளக்குக.
சிறுவினாக்கள்
திருவருட் பிரகாச வள்ளலார்
Answers
Answered by
0
விடை:
சென்னையில், இலிங்கிச் செட்டித் தெருவில் புராணத்தொடர் சொற்பொழிவு தொடர்ந்து பல நாள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒருநாள், அச்சொற்பொழிவை ஆற்ற வேண்டிய இராமலிங்கர் தமையனார் வர இயலாமையால், அவர், தம் ஒன்பது வயதுத் தம்பி இராமலிங்கரை அனுப்பி வைத்தார்.
அவ்வாறே சென்ற அவர், தம் தமையனின் நிலையை எடுத்துக்கூறிவிட்டு, 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' என்னும் பாடலைப் பாடிவிட்டு, எல்லோரையும் கவரும் வண்ணம் நெடுநேரம் அப்பாட்டிற்குரிய பொருளையும் கூறினார். அச்சொற்பொழிவை மெய்மறந்து கேட்டப் பெரியோர் அடுத்த வரும் நாட்களிலும் இராமலிங்கரையே சொற்பொழிவாற்றுமாறு அன்புக் கட்டளை இட்டனர்.
இந்நிகழ்வு, இராமலிங்கர் இளமையிலேயே சொற்பொழிவாற்றும் திறன் பெற்றிருந்தமையை உணர்த்துகிறது.
Similar questions