வள்ளலார் ஏற்படுத்திய சுத்த சன்மார்க்க சங்கம் குறித்துக் கட்டுரை எழுதுக.
நெடுவினாக்கள்
திருவருட் பிரகாச வள்ளலார்
Answers
விடை:
ஜீவகாருண்ய உள்ளம் :
வள்ளலார் அன்பின் ஊற்று; அன்பே அவர் உயிர்; அன்பே அவர் வடிவம். மண்ணுலகில் உயிர்கள்படும் வருத்தத்தை கண்டும் கேட்டும் பொறுத்திட மாட்டாமல், “அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்” -- என உளமுருக வேண்டி, உயிர்களின் துன்பத்தை போக்க வழிகாணத் துடித்தார்.
அவர் கடவுளின் பெயரால் உயிர்கொலை செய்வதனை அறவே வெறுத்தார்; பலிகொள்ளும் தெய்வக் கோயில்களைக் கண்டு நடுங்கினார்; போரில் விளையும் கொடுமைகளை அறிந்து, போரில்லா உலகைப் படைக்க விரும்பினார்.
சன்மார்க்க சங்கம் கண்டவர் :
இறைவன் ஒருவனே; அவன் ஒளி வடிவினன்; அருட்பெருஞ்சோதியாய் விளங்குபவன்; இத்தகைய இறைவனை அடைவதற்குத் தனிப் பெருங்கருணையே கருவி என்பதை உலகோர்க்கு உணர்த்தச் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை வள்ளலார் வடலூரில் நிறுவினார்.
வள்ளலார் காட்டிய நெறிகள் :
ஒருமை வாழ்வு, ஒருமையரசு, ஒருமையுலகம் காண விரும்பினார், வள்ளலார். ஆனால், சாதிகளிலும் மதங்களிலும் சமயச் சடங்குகளிலும் மக்கள் உழன்று கொண்டிருந்தனர். அவற்றிலிருந்து அவர்கள் மீண்டுவர, சாதி, மத, சமய, இனவேறுபாடு கூடா; எவ்வுயிரையும் கொல்லலாகாது; புலால் புசித்தல் கூடாது; எல்லா உயிர்களையும் தம்முயிர்போல் எண்ண வேண்டும்; ஏழை மக்களின் பசியைப் போக்குதல் வேண்டும்; உலக மக்கள் அனைவரையும் உடன் பிறப்புகளாய் நேசித்தல் வேண்டும் என்பனவற்றை இச்சங்கத்தின் நோக்கங்களாக கொண்டார்.
வள்ளலார் அருளிய வழிகளைக் கடைபிடித்து ஒழுகினால் சாத, மத, இன வேறுபாடுகள் நீங்கும்; போரும் பூசலும் அற்ற அமைதியான உலகம் உருவாகும்; அன்பே நிறைந்து ஒருமையுள் உலகம் நிலைபெறும்.