இராமலிங்கரின் உயிரிரக்கம் பற்றிய கருத்துகளை எழுதுக.
சிறுவினாக்கள்
திருவருட் பிரகாச வள்ளலார்
Answers
Answered by
7
விடை:
வள்ளலார், "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று, பயிர் வாடத் தாம் வாடினார். வீடு தோறும் இரந்தும் பசி நீங்காது வருந்துவோரையும், ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தோரையும் கண்டு வருத்தத்தால் இளைத்தார் வள்ளல் பெருமான்.
“வருத்தத்தால் வாடும் உயிர்களுக்கு இரக்கம் காட்டுவதே பேரின்ப திறவு கோல் என்றார், வள்ளலார். அவர் கடவுளின் பெயரால் உயிர்க் கொலை செய்வதை வெறுத்தார்; பலி கொள்ளும் சிறு தெய்வக் கோவிலைக் கண்டு நடுங்கினார்; போரில் உண்டாகும் கொடுமைகளை அறிந்து வருந்தினார்; போரில்லா உலகைப் படைக்க விழைந்தார்.
Similar questions