இராமலிங்கரின் பாட்டு பணி பற்றி எழுதுக
சிறுவினாக்கள்
திருவருட் பிரகாச வள்ளலார்
Answers
Answered by
0
விடை:
இராமலிங்கரின் பாட்டு பணி:
இராமலிங்கர் தம் ஒன்பதாம் வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். இவர் முருகன் மீதும், அம்மன் மீதும், சிவபெருமான் மீதும் பாடிய நூல்களே தெய்வமணி மாலை, வடிவுடைமாணிக்கமாலை, எழுத்தறியும் பெருமான் மாலை ஆகியனவாகும்.
ஆணும் பெண்ணும் சமம், மக்கள் அனைவரும் சாதி, சமயம், கோத்திரம், குலம், உயர்வு தாழ்வு ஆகிய வேறுபாடற்றுச் சமரச மனப்பான்மை கொண்டு மனித நேயத்துடன் வாழவேண்டும் எனத் தம் பாடல்களில் வற்புறுத்தினார்; 'உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்’ என்று வலியுறுத்தினார்.
ஒருமை வாழ்வு, ஒருமையரசு, ஒருமையுலகம் ஆகியவற்றினைத் தம் பாடல்களில் வலியுறுத்தினார். இராமலிங்கர் பாடிய பாடல்கள் யாவும் 'திருவருட்பா' எனப்படும்
Similar questions
Math,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago