வள்ளலார் அருளிய பாடல்கள் பற்றியும் தமிழ்ப்பற்றுக் குறித்தும் விலகி எழுதுக.
நெடுவினாக்கள்
திருவருட் பிரகாச வள்ளலார்
Answers
விடை:
இராமலிங்கர் பாடிய நூல்கள் :
பள்ளிப் படிப்பின்மீது நாட்டமில்லா இராமலிங்கர் தம் ஒன்பதாம் வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். இவர் முருகன்மீதும், அம்மன்மீதும், சிவபெருமான்மீதும் பாடிய நூல்களே தெய்வமணி மாலை, வடிவுடைமாணிக்கமாலை, எழுத்தறியும் பெருமான் மாலை ஆகியனவாகும்.
வள்ளலார் போற்றிய கொள்கைகள் :
ஆணும் பெண்ணும் சமம், மக்கள் அனைவரும் சாதி, சமயம், கோத்திரம், குலம், உயர்வு தாழ்வு ஆகிய வேறுபாடற்று சமரச மனப்பான்மை கொண்டு மனித நேயத்துடன் வாழவேண்டும் எனத் தம் பாடல்களில் வற்புறுத்தினார். எல்லா உயிர்களையும் தம்முயிராய்க் கருதித் தொண்டு செய்பவர் உள்ளத்தில்தான் இறைவன் அன்புருவாய் நடம் புரிவான் எனத் தம் பாடலில் விளக்கினார்.
மூடத்தனங்களை மண்மூட வலியுறுத்தல் :
சில உண்மைகளை விளக்குவதற்காக நூல்களில் கற்பனையாய்க் கூறப்படும் கதைகளையே உண்மை எனக் கருதும் மூடத்தனங்களெல்லாம் மண்ணால் மூடப்பட்டு பாடல்களில் வலியுறுத்தினார்; சாதி மதங்களைச் சிறுபிள்ளைவிளையாட்டு என்று சாடிப் பாடினார்.
பிறர் துயர் கண்டு வருந்துதல் :
பிச்சை ஏற்று வாழ்வோர், நீடிய பிணியால் வருந்துவோர், வாழ முடியாமல் வருந்தும் நேர்மையான ஏழைகள் ஆகியோர் நிலை கண்டு வருந்திப் பாடினார், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் வாடிப் பாடினார். இராமலிங்கர் பாடிய பாடல்கள் ‘திருவருட்பா' எனப்படும்.
வள்ளலாரின் தமிழ்ப்பற்று :
தமிழ்மொழியே இறவாத நிலை தரும் என்று கருதினார். “பயில்வதற்கும் அறிதற்கும் மிகவும் எளிதானது; பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையது; சாகாக் கல்வியை மிகவும் எளிமையாய் அறிவிப்பது; திருவருள் பலத்தால் கிடைத்த இத்தகைய தென்மொழி ஒன்றினிடத்தே மனம் பற்றச்செய்து, அத்தென்மொழியால் பல்வகைத் தோத்திரப்பாட்டுகளைப் பாடுவித்தருளினீர்” என்று உரைத்தார்.