India Languages, asked by StarTbia, 1 year ago

10.
செய்தற்கரிய செயல் செய்வது எப்போது?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter2 திருக்குறள் -
Page Number 10 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:

ஒரு செயலைச் செய்வதற்கு ஏற்ற காலம் வாய்க்காதபோது அமைதியாய் இருந்து, அதற்கான காலம் வாய்த்ததும் அச்செயலைத் தவறாமல் செய்து முடித்தல்.



விளக்கம்:



இந்த குறள் காலமறிதல் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் 
குத்தொக்க சீர்த்த இடத்து.

(அதிகாரம்: காலமறிதல் குறள் எண் : 490) 



கூம்பும் பருவத்துக் கொக்கு ஒக்க - வினைமேற்செல்லாதிருக்கும் காலத்துக் கொக்கு இருக்குமாறு போல இருக்க, மற்றுச் சீர்த்த இடத்து அதன் குத்து ஒக்க - மற்றைச் செல்லும் காலம் வாய்த்தவழி, அது செய்து முடிக்குமாறு போலத் தப்பாமல் செய்து முடிக்க வேண்டும். 


அதாவது ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடிக்க வேண்டும்.

Similar questions