2. ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மையையும் கடைபிடிக்காதலால் ஏற்படும் தீமையையும் எழுதுக.
சிறுவினாக்கள் / Short answer questions
Chapter2 திருக்குறள் -
Page Number 10 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
ஒழுக்கமுடையவரே உயர் குடியினர். ஒழுக்கம் தவறினால் தாழ்ந்த குடியனராக மதிக்கப்படுவர். கற்ற கல்வியினும் ஒழுக்கமே மேலானது. ஒழுக்கம் கெட்டவனிடத்தில் உயர்வாகிய பெருமை நில்லாது. மனவலிமை உடையார் ஒழுக்கத்தினின்றும் சிறிதும் தளர்ச்சி அடையார். நல்லொழுக்கத்தாலே எல்லோரும் உயர்வு அடைவர்; ஒழுக்கம் தவறியவர் அடையக் கூடாத பெரும் பழியையும் அடைவர்.
விளக்கம்:
ஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர். கல்வி, செல்வம் போன்ற பிற பலவற்றால் அடைய முடியாத உயர்வை ஒழுக்கம் ஒன்றினாலேயே அடையலாம் என்ற பொருளும் கொள்ளலாம்.
ஒழுக்கத்தினால் மேன்மை அடைந்தவர் இழுக்கினால் ஒழுக்கம் தவறிய மற்றவரை விட மிகையான கெட்ட பெயர் உண்டாகி அடையக் கூடாத பழியையும் ஏற்க நேரும்.
Similar questions
History,
8 months ago
English,
8 months ago
Environmental Sciences,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Biology,
1 year ago
English,
1 year ago