2. கல்வி வளர்ச்சிக்கு அம்பேத்கர் ஆற்றிய பணி யாது?
சிறுவினாக்கள் / Short answer questions
Chapter11 அண்ணல் அம்பேத்கர்-
Page Number 73 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
விடை:
கல்வி வளர்ச்சிக்கு அம்பேத்கர் ஆற்றிய பணிகள்:
அம்பேத்கர் 1946ஆம் ஆண்டு மக்கள் கல்விக் கழகத்தைத் தோற்றுவித்தார். மும்பையில், இவரின் அரிய முயற்சியால் உருவான சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தில் இன்றைய அறிவு வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.
விளக்கம்:
தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை பெறுவதற்கு அம்பேத்கர் நம்பிய சில வழிகள் கல்வி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதல், சமவாய்ப்புகளை உருவாக்குதல், மதமாற்றம் ஆகியன. அவர் ‘கற்பி, ஒன்றுசேர், போராடு’ என்று சொன்னதில் உள்ள கல்வி என்பது வெறுமனே பொருளாதார ரீதியாக உயர்வதற்கான, வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் கல்வி மட்டுமில்லை. அரசியல் கல்வியை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். “
ஓர் அடிமைக்கு அவனை முதலில் அடிமை என்பதை உணர்த்து, அவன் தானாகவே கிளர்ந்தெழுந்து போராடுவான்” என்றார். எனவே, தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக அரும்பாடுபட்டார்.