India Languages, asked by StarTbia, 1 year ago

5. அம்பேத்கர் குறித்து நேரு புகழ்ந்து கூறியது யாது?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter11 அண்ணல் அம்பேத்கர்-
Page Number 73 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:  

அம்பேத்கர் குறித்து நேரு புகழ்ந்து கூறியதாவது :

"பகுத்தறிவுத் துறையில் அவருக்கு இணை அவரே. ஆசியக் கண்டத்திலே மிகப்பெரிய தனியாள் நூலகத்தை அமைத்த பெருமை இவரையே சாரும்" என்று நேரு அம்பேத்கரைப் புகழ்ந்து கூறியுள்ளார்.


விளக்கம்:


சுதந்தர இந்தியாவில் முதலில் அமைந்த மத்திய அமைச்சரவையில் அம்பேத்கர் இடம் பெற வேண்டும் என நேரு பெரிதும் விரும்பினார். அம்பேத்கரும் அதற்கு உடன்பட்டு நாட்டின் முதல்  சட்ட அமைச்சராய்ப் பொறுப்பேற்றார். மேலும் ,  இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பதவி வகித்தார். 


அவரின் அயராத பணிகளை பாராட்டி இந்திய அரசு அம்பேத்கருக்கு 1990ஆம் ஆண்டு பாரத ரத்னா என்னும் உயரிய விருதை வழங்கிப் பெருமைப்படுத்தியது.

Similar questions