4. என்றும் இடும்பை தருவது எது?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter2 திருக்குறள் -
Page Number 10 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
விடை:
நல்லொழுக்கம் நன்மைக்குக் காரணம் ஆகும். தீயொழுக்கம் என்றும் துன்பத்தையே (இடும்பை) தரும்.
விளக்கம்:
இந்த கருத்தை கீழ்க்கண்ட குறளில் வள்ளுவர் வலியுறுத்தியுள்ளார்.
நன்றிக்கு வித்தாகு
நல்லொழுக்கந் தீயொழுக்க
மென்று மிடும்பை தரும்.
நன்றிக்கு - நன்மைக்கு
வித்தாகும் - காரணமாகும்
நல்லொழுக்கம் - நல்ல + ஒழுக்கம்
தீயொழுக்கம் - தீமையான +
ஒழுக்கம்
என்றும் -
இடும்பை - துன்பம்
தரும் - கொடுக்கும்
நல்லொழுக்க நெறியில் நடப்பவர்க்கு அது உடனே நன்மையைத் தராவிட்டாலும், பின்னால் ஏற்படப் போகும் நன்மைகளுக்கு இந்த நல்ல ஒழுக்கமே வித்தாக அமையும். தீயொழுக்க நெறியில் செல்பவனுக்கு, அது துன்பத்தை உடனே விளைவிப்பது மட்டுமின்றி, எக்காலத்திலும் அது பெருந்துன்பத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும்.
இப்பாடல் ஒழுக்கத்தின் விளைவுகளை விரிவாக எடுத்துரைக்கிறது.
Answer:
நல்லொழுக்கம் நன்மைக்குக் காரணம் ஆகும். தீயொழுக்கம் என்றும் துன்பத்தையே (இடும்பை) தரும்
Explanation: