அன்னமய்யாவின் நண்பர்களுடன் பரமேசுவரன் என்ற மணி உணவு உண்ட விதம் குறித்து எழுது ?
Answers
Answered by
0
அன்னமய்யாவின் நண்பர்களுடன் பரமேசுவரன் என்ற மணி உணவு உண்ட விதம்:
- அன்னமய்யா மற்றும் அவருடைய நண்பர்கள் வட்டமாக அமர்ந்து உணவு உண்டனர்.அதில் மணியும் கலந்து கொண்டார்.
- அவர்கள் அனைவரும் கை கழுவாமல் உணவு உண்டனர்
- அதே போல் மணியும் வேறு வழியில்லாமல் கை கழுவாமல் சாப்பிடுவதற்கு ஆரம்பித்தார்.
- கால் உருண்டை கம்மஞ்சோற்றை இடது கையில் வைத்தார்கள். அதன் நடுவில் ஒரு குழி அமைத்து அதில் வைத்தார்கள்.
- அனைவரும் அச்சோற்றை வேகமாக உண்டனர். அவர்கள் யாருடனும் பேசாமல் சாப்பிடுவதிலே ஆர்வம் காட்டினர்.
- இவர்கள் வேகமாக சாப்பிடுவதை பார்த்த மணி சோறு ருசியாக உள்ளதோ என்று நினைத்து, வெறும் சோற்றை ருசி பார்த்தான்.
- ஆனால் அச்சோற்றின் நெடி அவனை ஏதோ செய்தது. அச்சோற்றுடன் அவியலை சேர்த்து சாப்பிட்டான்.
- அன்னமய்யா மற்றும் அவருடைய நண்பர்கள் சாப்பிட்டவுடன் கைகளை மண்ணினால் சுத்தப்படுத்தினார்கள்.
- அதேபோல் மணியும் கைகளை மண்ணினால் சுத்தப்படுத்தினான்.
- பிறகு அனைவரும் அமர்ந்து ஊர் கதைகளை பேச ஆரம்பித்தனர். மணியோ படுத்து உறங்கினான்.
Similar questions