India Languages, asked by lijumgeyi1369, 11 months ago

வேலொடு நின்றான் இடுஎன்றது போலும் கோலொடு நின்றான் இரவு- இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்கு ?

Answers

Answered by shobanamega7582
40

பொழிப்பு: ஆட்சிக்குரிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல், போகும் வழியில் தனியே வேல் ஏந்தி நின்ற கள்வன் 'கொடு' என்று கேட்பதைப் போன்றது.

மணக்குடவர் உரை: தனியிடத்தே வேலொடு நின்றவன் கையிலுள்ளன தா வென்றல்போலும்: முறைசெய்தலை மேற்கொண்டு நின்றவன் குடிகள்மாட்டு இரத்தல்.

கோலொடு நிற்றல்- செவ்வைசெய்வாரைப் போன்று நிற்றல். நிச்சயித்த கடமைக்குமேல் வேண்டுகோளாகக் கொள்ளினும். அது வழியிற் பறிப்பதனோடு ஒக்குமென்றவாறு.

பரிமேலழகர் உரை: வேலொடு நின்றான் - ஆறலைக்கும் இடத்துத்தனியே வேல் கொண்டு நின்ற கள்வன், இடு என்றது போலும் - ஆறுசெல்வானை 'நின் கைப்பொருள் தா' என்று வேண்டுதலோடுஒக்கும், கோலொடு நின்றான் இரவு - ஒறுத்தல் தொழிலோடு நின்றஅரசன் குடிகளைப் பொருள் வேண்டுதல்.

('வேலொடு நின்றான்' என்றதனால் பிறரொடு நில்லாமையும், 'இரவு' என்றதனால் இறைப்பொருள் அன்மையும் பெற்றாம், தாராக்கால்ஒறுப்பல் என்னும் குறிப்பினன் ஆகலின் இரவாற் கோடலும் கொடுங்கோன்மைஆயிற்று,இவை இரண்டு பாட்டானும் கொடுங்கோன்மையதுகுற்றம் கூறப்பட்டது.)

............

mark as brainilist answer

.....

think it helps u

Answered by steffiaspinno
87

உவமை அ‌ணி  

அ‌ணி ‌விள‌க்க‌ம்

  • தெ‌ரி‌யாத ஒ‌ன்றை ‌விள‌க்க, தெ‌ரி‌ந்த ஒ‌ன்றை ‌விள‌க்‌கி அ‌தி‌லிரு‌ந்து நா‌ம் கூற எ‌ண்‌ணி கரு‌த்‌தினை ‌விள‌க்குவது உவமை அ‌ணி ஆகு‌ம்.
  • உவமை அ‌ணி‌யி‌ல் உவமான‌ம், உவமேய‌ம், உவம உருபு ஆ‌கிய மூ‌ன்று‌ம் வெ‌ளி‌ப்படையாக வரு‌ம்.  

எடு‌த்து‌க்கா‌ட்டு

  • வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்

        கோலொடு நின்றான் இரவு

‌விள‌க்க‌ம்

  • செ‌‌ங்கோ‌ல் உடைய அரச‌ன் ஒருவ‌ன் த‌ன் அ‌திகார‌த்‌தினை பய‌‌ன்படு‌த்‌தி வ‌ரி ‌எ‌ன்ற பெய‌ரி‌ல் ம‌க்க‌ளிட‌ம் பண‌ம் வசூ‌லி‌ப்பது, வே‌ல் முத‌லிய ஆயுத‌ங்களை கொ‌ண்ட ஒரு வ‌ழி‌ப்ப‌றி செ‌ய்வத‌ற்கு சம‌ம் ஆகு‌ம்.  
  • உவமான‌ம்  -   வேலொடு நின்றான் இடுஎன்றது
  • உமமேய‌ம் -   கோலொடு நின்றான் இரவு
  • உவம உருபு     -   போலும்
Similar questions