மூக்கின் வழியாக உடலினை அடையும் நுண்ணுயிரிகள் பெரும்பாலும் _____________ தாக்கும்.
அ. குடலினை ஆ. நுரையீரலினை
இ. கல்லீரலினை ஈ. நிணநீர் முனைகளை
Answers
Answered by
0
மூக்கின் வழியாக உடலினை அடையும் நுண்ணுயிரிகள் பெரும்பாலும் நுரையீரலினை தாக்கும் .
- மனிதனின் உடலில் சுவாசித்தல் செயலை செய்யும் உறுப்பு மூக்கு.
- இதன் வழியாக செல்லும் நுண்ணுயிரிகள் நேரடியாக நுரையீரலினை தாக்குகின்றன.
- எடுத்துக்காட்டாக காசநோய், தொண்டை அழற்சி நோய் மற்றும் கக்குவான் இருமல் ஆகியவை சுவாசித்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களாகும். இது ஒரு தொற்று நோயாகும்.
- தொடர்ந்து நெஞ்சு வலி, இருமல் , உடல் எடைக் குறைவு மற்றும் பசிக்காமல் இருத்தல் ஆகியவை காசநோயின் அறிகுறிகளாகும்.
- இந்த காசநோயினால் பாதிக்கப்படும் முதன்மையான உறுப்பு நுரையீரல் ஆகும்.
- கோர்னிபாக்டீரியம் டிப்திரியா (தொண்டை அழற்சி நோய் ) என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது.
- காய்ச்சல், தொண்டை வலி, சுவாசித்தலில் இடையூறுகள் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.
- எனவே மூக்கின் வழியாக உடலினை அடையும் நுண்ணுயிரிகள் பெரும்பாலும் நுரையீரலினை தாக்கும் .
Similar questions