மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படும் உறுப்பு
அ. கல்லீரல் ஆ. நுரையீரல்
இ. சிறுநீரகம் ஈ. மூளை
Answers
Answered by
2
Explanation:
இக்டீரஸ் என்றும் அழைக்கப்படும் மஞ்சள் காமாலை நோய் (முன்பெயரடை: காமாலை ), அதி பைலிரூபிரத்தத்தினால் (ரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகரித்தல்) சீதச்சவ்வு, விழிவெண்படலத்தின் மேல் உள்ள கண் சவ்வு (கண்களின் வெள்ளைப் பகுதி) மற்றும் தோல் பகுதிகள் மஞ்சள் தன்மை அடைவதை குறிக்கின்றது. அதிபைலிரூபி ரத்தம் செல்வெளிநீரில் பிலிரூபின் அளவு அதிகரிக்கும் நிலையையும் உருவாக்குகிறது. நிறம் மாறுதல் வெளிப்படையாகத் தெரிய வேண்டுமெனில் ஊநீரில் உள்ள பிலிரூபின் அளவு 1.5மிகி/டெசி.லிட்டருக்கும் அதிகமாக இருக்க வேண்டும்.[1] இது பொதுவான தோராயமான அளவான 0.5மிகி/டெசி.லிட்டரை[1] விட மூன்று மடங்கு அதிகமாகும். மஞ்சள் காமாலை என்பது ஃபிரஞ்சு மொழி வார்த்தையான மஞ்சள் என்று பொருள் தரக் கூடிய jaune என்ற வார்த்தையில் இருந்து வந்தது.
நோய் உணர்குறிகள்
Answered by
0
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படும் உறுப்பு கல்லிரல் .
- ஹெப்பாடிடிஸ் என்னும் வைரஸானது மஞ்சள் காமாலை நோயை ஏற்படுத்துகிறது.
- மனிதன் உண்ணும் உணவு பொருட்களை எளிதில் செரிமானம் அடைவதற்கு கல்லிரல் பயன்படுகிறது.
- மேலும் வளர்சிதை மாற்றத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
- காய்ச்சல், வாந்தி , மயக்கம், பசியின்மை,தோலில் அரிப்பு, தலைவலி, கண்கள் மற்றும் தோலானது மஞ்சள் நிறத்தில் காணப்படுதல் ஆகியவை மஞ்சள் காமாலை நோயின் அறிகுறிகளாகும்.
- ஹெப்பாடிடிஸ் என்னும் வைரஸானது கல்லிரலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
- இது நோயுள்ள தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுகின்றன.
- மஞ்சள் காமாலையானது எச்சில், வியர்வை, கண்ணீர் , தாய்ப்பால் ஆகியவற்றின் மூலமாகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டதாகும்.
- எனவே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படும் உறுப்பு கல்லீரல் ஆகும்.
Similar questions